கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் Jeffersonville, Indiana, USA 65-0217 1நாம் தலைவணங்குவோம். அன்புள்ள தேவனே, மீண்டும் ஒருமுறை நாங்கள் கூடியுள்ள இந்த சிலாக்கியத்திற்காக, இன்று பிற்பகல் நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் இன்று ஜனங்களின் முன்னிலையில் நின்று கொண்டு, இம்மணி நேரத்துக்கு மிகவும் அவசரமென்றும் இன்றியமையாததென்றும் நாங்கள் கருதும் இச்செய்தியை அளிக்க எங்கள் இருதயங்கள் எவ்வளவாக வாஞ்சித்ததென்பதை நீர் மாத்திரமே அறிவீர். இந்த சில நாட்களை நீர் எங்களுக்குத் தந்தருளியுள்ளீர். அன்புள்ள தேவனே, உமது இரக்கத்தின் கரம் எங்கள் மேல் தங்கியிருந்து, எங்களை வழிநடத்த வேண்டுமென்று ஜெபிக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்குத் தேவையானவைகளைத் தந்தருளுவீராக. ஏனெனில் உம்மை அதிகமாக அறிந்துகொள்ள எங்கள் இருதயங்கள் வாஞ்சிக்கின்றன. தானியம் முதிர்வடைந்து, வயலில் அறுப்புக்கு ஆயத்தமாயுள்ளதை நாங்கள் காண்கிறோம். தானியம் போரடிக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும் நேரத்துக்காக ஆயத்தமாயுள்ளதென்று நாங்கள் அறிகிறோம். அன்புள்ள தேவனே, எங்களைச் சுற்றிலுமுள்ள பதர்களை நீர் விரித்து கொடுத்து, அடுத்த சில நாட்கள் நாங்கள் குமாரனின் சமூகத்தில் கிடந்து, தேவனுடைய இராஜ்யத்துக்கென எங்களை முதிர்வடையச் செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம். 2இங்குப் பாடவிருக்கும் ஒவ்வொரு பாடலையும் ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, இங்கு ஏறெடுக்கப்படவிருக்கும் ஒவ்வொரு ஜெபத்தையும் நீர் ஆசீர்வதித்து அதற்கு உத்தரவு அருளுவீராக. இழந்துபோன அனைவரையும் இரட்சிப்பீராக. இங்கிருந்துவிட்டு சென்று அலைந்து திரிபவர்களை ஜீவனுள்ள தேவனுடைய வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்கள் ஐக்கியங் கொள்ளச் செய்வீராக. தேவனே, எங்கள் கூரையின் கீழ்வரும் வியாதியஸ்தர் ஒவ்வொருவரையும் நீர் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இதை அருள்வீராக. இந்த கூட்டங்கள் முடிவு பெறும்போது, பலவீனமான ஒருவராவது எங்கள் மத்தியில் இருக்க வேண்டாம். மற்றும் அன்புள்ள தேவனே, வெளியே வரும்படி அழைக்கப்பட்டவர்களென்றும், சபையென்றும் இம்மணி நேரத்தில் உரிமைகோரும் எங்களையும், இக்கடைசி நாளில் இந்த அற்புதமான ஐக்கியத்தில் பங்கு கொள்வதற்கென உலகம் முழுவதிலுமிருந்து பாபிலோனை விட்டு வெளி வந்தவர்களையும், நீர் சிறந்த முறையில் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் உண்மையில் பசியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்குத் தெரிந்த வரையில் இவ்வுலகின் காரியங்களினின்று எங்களை வெறுமையாக்கியுள்ளோம். பாரமான யாவற்றையும், எங்களை சுற்றி நெருங்கி நிற்கிற அனைத்தையும் நாங்கள் தள்ளிவிட்டோம். எங்களுக்கு நியமித்திருக்கிற இந்த ஓட்டத்தில் நாங்கள் பொறுமையோடே ஓடக்கடவோம். பிதாவே, இதை அருள்வீராக. இந்த ஆராதனை முடிவில், நாங்கள் பிரவேசித்ததைக் காட்டிலும், அதிக பூரணமுள்ளவர்களாயும், பெலமுள்ளவர்களாயும், மேலான கிறிஸ்தவர்களாயும் விளங்க அருள்புரியும். தேவனுக்கே எல்லா மகிமையும் உரித்தாகுக. இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 3சில நாட்களாக நான் காத்துக் கொண்டிருந்த இந்த கம்பீரமான சிலாக்கியம் இன்றிரவு எனக்கு கிடைத்துவிட்டதென்று எண்ணுகிறேன். அன்றொரு நாள் நான் என் மனைவியிடம், “கூடாரத்துக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருப்பது எனக்கு பயத்தை விளைவிக்கிறது'', என்றேன். உலகம் முழுவதிலும் எனக்கு வேறு நண்பர்கள் உள்ளனர் என்பது உண்மையே. ஆனால் இந்த கூடாரத்தைக் குறித்து சிறப்பான ஏதோ ஒன்றுண்டு. இப்பூமியில் தேவன் எனக்கு ஜீவனை அருளின போது, இங்கிருந்த மண்ணைக் கொண்டு தான் நான் உண்டாக்கப்பட்டேன். அவருடைய வருகை தாமதிக்குமானால், நான் இங்கு எங்காவது அடக்கம் செய்யப்படுவேன் என்று நம்புகிறேன். அவர் வரும்போது, இங்கு எங்காவது என்னைக் காண்பார். ஜெபர்ஸன்வில்லைக் குறித்து நான் நினைக்கும்போது, இது விசேஷமான ஒன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. அன்றொரு நாள் நான் தனிமையில் உள்ள உணர்வை பெற்றேன். நான் என் மனைவியிடம், ''எனக்கு வீடு செல்ல வேண்டுமெனும் ஏக்கம் உண்டாகின்றது. என்ன காரணமென்று தெரியவில்லை. ஒருக்கால் ஜெபர்ஸன்வில்லிலுள்ள ஜனங்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு செய்யத் தெரிந்த ஒன்றே ஒன்று, அங்கு சென்று சில நாட்கள் கூட்டங்கள் நடத்தி, தேவனிடத்திலிருந்து ஏதாவதொன்றை அறிந்து கொள்வதே. நாம் ஏதாவதொன்றை அறிந்து கொள்ள அவர் விரும்புகிறார் போலும்'' என்றேன். இப்பொழுது நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியமான, இன்றியமையாத பொருள், விவாகமும் விவகாரத்தும் என்பதே, ஒரு கேள்வி இருக்குமானால், அதற்கு ஒரு பதிலும் இருந்தாக வேண்டும். ஒரு பதில் இல்லாமல், ஒரு கேள்வி இருக்க முடியாது. என்னவாயினும், அதற்கு ஒரு பதில் இருந்தாக வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால், ஞாயிறு காலை அதைக் குறித்து பேச விரும்புகிறேன். 4நாளை இரவு நாம் அங்கிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்... அந்த பள்ளியின் பெயர் என்ன? பார்க்வ்யூ அரங்கம். என்ன, ஐயா? (சகோ. பிரான்ஹாம் சகோ. நெவிலுடன் பேசுகின்றார் - ஆசி.) பார்க்வ்யூ ஜூனியர் உயர் நிலைப்பள்ளி. அது எங்குள்ளதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? வழியில் சைகை காட்டிகள் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா சகோ. நெவில்?... அது இங்கிருந்து சுமார் முக்கால் மைல் தொலைவில் உள்ளது. அங்கு சைகை காட்டி இருக்கும். நீங்கள் சாலையிலிருந்து தள்ளி வர வேண்டும். அது அழகான, உயரமான கட்டிடம். உங்கள் கையை நன்றாக நீட்டி, நீங்கள் விரும்புவதை குறிப்பெழுதிக் கொள்ள அங்கு தாராளமான ஸ்தலம் உள்ளது. இந்த கூடாரத்தில் நடக்கும் கூட்டங்களில் நீங்கள் நெருக்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக அங்கு தாராளமான இடத்தை அனுபவிக்கலாம். அங்கு தாராளமான இடவசதி உண்டு. வாகனங்களை நிறுத்துவதற்கும் தாராளமான இடம் உண்டு. அங்கு சில நிபந்தனைகளை நாம் கைக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். 6.30 மணிக்கு முன்னால் யாரும் அங்கு வரக்கூடாது (சகோ. நெவில், 5.30 மணிக்கு முன்னால் வரக் கூடாது என்று கூறுகின்றார் - ஆசி). நாம் 6.30 மணிக்கு அங்கு அடைவது நலமாயிருக்கும். நகரத்தில் ஆறாயிரம் பேர் உட்காரக் கூடிய ஒரு அரங்கம் உள்ளது. நாம் நல்லவர்களாயிருப்போமானால், ஒரு பெரிய கூட்டத்தை நடத்த என்றாவது ஒரு நாள் அவர்கள் அதை நமக்குத் தரக்கூடும். ஒருக்கால் இந்த கோடை காலத்தில், நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பின்பு. 5எனவே நான் நினைக்கிறேன்... பார்க்வ்யூ அரங்கத்தில் எத்தனை பேர் உட்காரலாம்? ('நாலாயிரம்' என்று சகோ. நெவில் பதிலளிக்கின்றார் - ஆசி). நாலாயிரம். எனவே பாருங்கள், நமக்கு தாராளமான இடவசதி இருக்கும். அங்கு நெருக்கம் இருக்காது. 6.30 மணிக்கு வந்து விடுங்கள். அப்பொழுது எல்லோருமே குறித்த நேரத்துக்கு வந்து விடலாம். உங்கள் இருக்கை வசதியாயிருக்குமென்று உறுதியாய் நம்புகிறேன். அது இப்படி சற்று உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு குறிப்பெழுதுவதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது. கர்த்தருக்கு சித்தமானால் அது... இன்றிரவு, இது புதன் இரவு ஜெப கூட்டமாயிருப்பதால், நமக்கு... இந்த இடம் ஒருவாறு நிரம்பியுள்ளது. எனவே நாளை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். ஒருக்கால் இந்த இடம் நிரம்பி வழிந்தால், நாம் அங்கு செல்லலாம் என்னும் எண்ணத்துடன் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்தோம். நாளை இரவு அங்கு செல்வது நலமென்று எண்ணுகிறேன், இல்லையா சகோ. நெவில்? அது நல்ல கருத்தென்று எத்தனை பேர் நினைக்கின்றீர்கள்? அங்கு தாராளமாக இடவசதி இருக்கும். அதற்கான வாடகை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. சபையிலுள்ள சில சகோதரர்கள் அதை செலுத்திவிட்டார்கள். அதன் வாடகை ஓரிரவுக்கு ஐம்பது டாலர்கள் மாத்திரமே. அது மிக மலிவு. அத்தனை பேர் உட்காரக் கூடியதும் அழகான மேடையும் கொண்ட அப்படிப்பட்ட ஒரு புது கட்டிடம். எல்லாவிடங்களிலும் ஓரிரவுக்கு ஐம்பது டாலர்கள் வாடகைக்கு கிடைத்தால் மிக நலமாயிருக்கும். 6நாம் காணிக்கை எடுப்போம் என்று நினைக்கிறேன். அந்த மனிதர் மாத்திரம் வாடகை செலுத்துவதை நாம் விரும்பவில்லை. அதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடலாம். நமது செலவுக்கான பணம் கிடைத்தவுடனே, காணிக்கை எடுப்பதை நாம் நிறுத்தி விடுவோம். இங்கு நமது மத்தியில் யாராகிலும் அந்நியர்கள் இருப்பார்களானால் அவர்களுக்கு இதைக் கூற விரும்புகிறேன். பணத்துக்காக நாங்கள் ஜனங்களை அணுகமாட்டோம், யாசிக்கமாட்டோம் என்னும் கொள்கையை நாங்கள் வைத்துள்ளோம். நாங்கள் காணிக்கை தட்டை சுற்றிலும் அனுப்புகிறோம்... அது மார்க்க சம்பந்தமான ஒரு செயல். அநேக முறை நான் காணிக்கை தட்டை அனுப்புவதேயில்லை. ஆனால் அது கிரியை செய்வதில்லை. ஏனெனில் கொடுத்தல் என்பது நமது மார்க்கத்தின் ஒரு பாகமாயுள்ளது. அது நமது கடமைகளில் ஒன்று. அது ஒரு காசாயிருந்தாலும் பரவாயில்லை. ஐசுவரியவான்கள் தங்கள் பொக்கிஷங்களிலிருந்து காணிக்கை போடும் இடத்தில், ஒரு விதவை சென்று காணிக்கை போட்டதை இயேசு கண்டார். ஒருக்கால் இந்த விதவையின் பக்கத்தில் பசியாயுள்ள அவளுடைய இரண்டு சிறு பிள்ளைகள் நடந்து சென்றிருக்கக் கூடும். அவள் தனக்கிருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டாள். மூன்று காசுகள். இயேசு, ''யார் அதிகமாகப் போட்டது?'' என்று கேட்டார். 7ஒருக்கால் நான் அங்கிருந்தால், ''சகோதரியே, அப்படி செய்ய வேண்டாம். எங்களிடம் நிறைய பணம் உள்ளது'' என்று சொல்லியிருப்பேன். ஆனால் அவரோ அவளைத் தடுக்கவில்லை. பாருங்கள்? பாதையில் அவர் அவளுக்காக பெரிதான ஒன்றை வைத்திருந்தார். எனவே பாருங்கள், அவள் போக வேண்டிய மகிமையின் வீடு ஒன்று அவளுக்கிருந்தது, அவர் அவளைத் தடை செய்யவில்லை. அவள் மூன்று காசுகள் போட அவர் அனுமதித்தார். ஏனெனில் அவள் அதைச் செய்ய விரும்பினாள். அவள் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட விதவையாயும், ஜீவனத்துக்காக மூன்றே காசுகள் கொண்டவளாயும் இருந்த போதிலும், அவள் அதை செய்ய விரும்பினாள். எனவே பாருங்கள். ஜனங்கள் கொடுக்க விரும்பும்போது அவர்களுக்கு அப்படி செய்ய நீங்கள் தருணம் அளிக்க வேண்டும். 8ஆனால் ஜனங்கள் இங்கு நின்று கொண்டிருப்பதை நான் நினைத்துப் பார்க்கும்போது; ஜனங்கள், “ஐம்பது டாலர்கள் யார் கொடுப்பார்கள்? இருபது டாலர்கள் யார் கொடுப்பார்கள்?'' என்கின்றனர். அது உங்களுடைய அறிவுக்கு இழுக்கை விளைவிக்கும். ஒரு கூட்டம் நடத்துவதற்கு பணம் அவசியம் என்பதை ஜனங்கள் உணருவார்கள் என்று கருதுகிறேன். நிர்வாகிகள் அவ்வாறு செய்ய நான் அனுமதிக்கவில்லை. நான், ''நீங்கள் அப்படி செய்ய வேண்டுமென்றால் அப்பொழுது எனக்கு கூடாரத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் அதை செய்ய வேண்டாம்'' என்று அவர்களிடம் கூறினேன். இருப்பினும் இதை பரிபூரண மார்க்க சம்பந்தமான ஆராதனைய பார்க்க, நாங்கள் காணிக்கை தட்டை அனுப்ப வேண்டுமென்று கருதுகிறேன். எனவே ஒவ்வொரு இரவும் அவர்கள், “இப்பொழுது நாங்கள் காணிக்கை எடுக்கப் போகின்றோம்'' என்று அறிவித்து, ஒரு சிறு காணிக்கை தட்டை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்புவார்கள். காணிக்கை தட்டை அனுப்புவதுடன் அது முடிவு பெறும். 9ஒவ்வொரு இரவும் கர்த்தருக்கு சித்தமானால், சபைக்காக மிகவும் தெளிவான ஒரு செய்தியை கர்த்தர் என் இருதயத்தில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அநேக நாட்களாக நான் ஜெபத்தில் தரித்திருந்தேன், அதைக் குறித்து இப்பொழுது நான் கூறப் போவதில்லை. ஏனெனில் அன்றொரு நாள் ஒரு பெரிய சம்பவம் நிகழ்ந்தது, அது உண்மையிலேயே மிகப் பெரியது. அதை உங்களுக்கு தெரியப்படுத்த எனக்கு விருப்பம். இப்பொழுது முக்கியமான பொருள் என்னவெனில், அநேகர் அதை அறிய விருப்பமாயுள்ளனர் என்று பில்லி கூறினான். “விவாகமும், விவாகரத்தும்” என்பதாம். அது மிகவும் பெரிய பொருள். அதை எப்படி அணுக வேண்டுமென்று நான் அறியாதிருந்தேன். அதைக் குறித்து நான் ஜெபிக்க சென்றபோது, கர்த்தர் என்னை சந்தித்தார். எனக்குத் தெரியும்... அது என்னிடம் இருக்கவில்லை, ஆனால் தேவன் எனக்குத் தந்தருளினார். இப்பொழுது அது என்னிடம் உள்ளது. அந்த பிரச்சினைக்கு சரியான விடையை தேவன் எனக்குத் தந்தார் (பாருங்கள்?). அது உண்மையென்று நானறிவேன். எனவே எப்பொழுது அதை பிரசங்கிப்பேன் என்று குறிப்பாக என்னால் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் ஞாயிறன்று சகோதரிகள் நடத்தும் கூட்டத்தை ரத்து செய்யும்படி அவர்களிடம் கேட்டுக் கொள்வேன். எனக்குத் தெரியவில்லை. விவாகமான பெண்கள் அவர்களுடைய கணவர்களுடன் வர விரும்புவார்களா என்பதை அது பொறுத்தது. சில முக்கியமான காரியங்களை எடுத்துரைக்க வேண்டியுள்ளது. உண்மை கூறப்பட வேண்டும்... நாங்கள் அதை முற்றிலுமாக “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதாக உங்கள் முன் வைக்க விரும்புகிறோம்... 10அப்பொழுது உண்மை எதுவென்று உங்களுக்கு விளங்கும். அவர் அதை செய்து தருவாரென்று அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், அன்றொரு நாள் நான் உணவு விடுதிக்குச் சென்று உணவு உண்டு கொண்டிருந்தேன். நீங்கள் அங்கு செல்வீர்களென்று விடுதியின் முதலாளியான ஜெர்ரி எதிர்பார்க்கிறார். நம்மில் ஒருவர் அங்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த முதலாளி, ''இந்த வாரம் எனக்கு நல்ல வியாபாரம் இருக்கும்“, என்றாராம். அவர், ''இங்கு கைப் பந்தாட்டம் (Basket ball) நடக்கப் போகின்றது. அதுவுமல்லாமல் சகோ. பிரான்ஹாம் கூட்டம் நடத்தப் போகின்றார். எனவே நிறைய பேருக்கு நான் உணவு கொடுப்பேன்'' என்றார். ராஞ்ச் வீடு (Ranch house), அங்குள்ள இடங்களில் ஒன்று. அவர்கள் உண்மையில் நல்லவர்களாய் இருந்து வந்துள்ளனர். உங்களை நான் மெச்சுகிறேன், பெருமையடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களைக் குறித்து நல்ல காரியங்களை அவர்கள் கூறவில்லை. அன்றொரு நாள் காலை ராஞ்ச் வீட்டின் மேலாளர் என்னை சந்தித்தார். நான் அரிசோனாவிலிருந்து 2.30 மணிக்கு அங்கு அடைந்தேன். அவர், ''சகோ. பிரான்ஹாமே, இன்னும் ஒரு கூட்டம் நீங்கள் வைக்கப் போவதாக கேள்விப்பட்டேன். அது எனக்கு உதவியாயிருக்கும்'' என்றார். அவர் தொடர்ந்து, இன்னும் ஒரு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன், “உங்கள் கூட்டத்திலிருந்து இங்கு வருபவர்கள் உண்மையில் மிகவும் நல்லவர்கள்'' என்றார். அதைக் கேட்ட போது, அது எனக்கு நல்லுணர்வைத் தந்தது (பாருங்கள்). நீங்களெல்லாரும் என் குழந்தைகள் (Kids). இல்லை, பிள்ளைகள். குழந்தைகள் என்னும் அர்த்தத்தில் உபயோகிக்கப்படும் அந்த சொல் வெள்ளாட்டைக் குறிக்கின்றது. நீங்கள் வெள்ளாடு அல்ல, நீங்கள் என் ஆட்டுக்குட்டிகள். உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? நீங்கள் கர்த்தரின் ஆட்டுக்குட்டிகள். உங்களை போஷிப்பதற்கும் அவர் என்னை அனுமதித்துள்ளார். அவர் தொடர்ந்து என்னை அனுமதிப்பாரென்று நம்புகிறேன். நாம் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்... 11ஏழு முத்திரைகள் பிரசங்கித்த நாள் முதற்கு, விவாகமும் விவாகரத்தும் என்னும் பொருளின் பேரில் பேச வேண்டுமெனும் எண்ணம் எனக்கிருந்து வந்துள்ளது. ஏழு முத்திரைகள் திறக்கப்படும்போது, எல்லா இரகசியங்களும் வெளியாக வேண்டுமென்பது நீங்கள் அறிந்ததே. வேதத்தில் மறைந்துள்ள எல்லா இரகசியங்களும். இப்பொழுது நான் நினைக்கிறேன்... எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதால், நான் நினைக்கிறேன்... அதை ஒலிப்பதிவு செய்தாவது வைக்க வேண்டுமென்று எண்ணினேன். ஏனெனில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், “அவர் மனதில் என்ன இருந்ததோ? அவர் இதைக் குறித்து என்ன கூறுவாரோ?'' போன்ற சந்தேகங்கள் சபையில் எழும். எனவே இத்தகைய கடினமான பொருள்களின் பேரில், கர்த்தருடைய உதவியைக் கொண்டு, உங்களிடம் பிரசங்கிக்க முயல்வேன். அதன் பிறகு, எனக்கு ஏதாவதொன்று நேர்ந்து, அவருடைய வருகைக்கு முன்பு நான் போக நேரிட்டால், இவையனைத்துமே பதிவு செய்யப்பட்ட நிலையில் உங்களுக்கு இருக்கும். 12இப்பொழுது சில புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். நான் சகோதரி வேயிலைக் காண்கிறேன். டாக்டர் வேயில் இங்குள்ளாரா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. சகோதரி வேயில், அவர் இங்குள்ளாரா? அவர் கூட்டத்தில் ஒருக்கால் இருக்கலாம். அவரைக் காண முடியவில்லை. ஆனால்... ஓ, ஆமாம் பின்னால் இருக்கிறார். சகோ. வேயில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவர்கள் இரண்டு புத்தகங்கள் என்று இன்று கூறினதாக எனக்கு ஞாபகம். சகோ. வேயில், அது சரியா? இரண்டு புத்தகங்களும் உங்களிடம் உள்ளனவா? நான் கேள்விப்பட்டபடி, ஒவ்வொரு நபருக்கும் ஒரு பிரதி கொடுக்கப்படும்... அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். ஒருக்கால் நான் தவறாயிருக்கக் கூடும். ஏழு சபை காலங்கள் எழுதி முடிந்துவிட்டது. சகோ. வேயில், அது சரியா? இப்பொழுது அச்சில் உள்ளது. அதை நீங்கள் பெற விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் உங்கள் இருதயத்திலுள்ள அநேக கேள்விகளுக்கு அது விடையளிக்கின்றது. அதன்பிறகு, திறக்கப்பட்ட ஏழு முத்திரைகளை புத்தக வடிவில் கொண்டு வர எத்தனித்துள்ளோம். அப்பொழுது விருப்பமுள்ளவர்கள் அதை படித்து புரிந்து கொள்ளலாம். 13அதை புத்தக வடிவில் எழுதினபோது... முதலில் அது பேசப்பட்ட விதமாகவே ஒலி நாடாக்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டது. உங்களுக்குத் தெரியும். பிரசங்கம் செய்வதென்பது ஒன்று, புத்தகம் எழுதுவதென்பது வேறொன்று. உதாரணமாக, ஒரு பொருளின் பேரில் நான் உங்களிடம் பேசும்போது, “இப்பொழுது சர்ப்பத்தின் வித்து...'' என்று கூறுகின்றேன். நீங்களும் அதை புரிந்து கொள்கிறீர்கள். பாருங்கள்? ஆனால் அதை அப்படியே புத்தகத்தில் எழுதினால், புத்தகத்தைப் படிக்கும் வாசகர் ஒருவர், ''சர்ப்பத்தின் வித்து என்றால் என்ன?'' என்று வியப்புறுவார். பாருங்கள்? அவர்களுக்கு அது என்னவென்று தெரியாது. பிரின்ஸ்டன் போன்ற இடங்களுக்கு அது செல்ல நேரிட்டால், நாம் புத்தியில்லாதவர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். எனவே, இதன் கருத்தை மாற்றாமல், இலக்கண ரீதியில் இதை எழுதுவதற்காக நான் சகோ. வேயிலின் உதவியை நாடியுள்ளேன். என் இலக்கணம் அவர்களுக்கு புதிராக இருக்கும். சகோ. வேயில் அதில் சிறந்தவர். எனவே அவர்... 14நமது விலையேறப்பெற்ற சகோதரன் இதன் விளைவாக எப்படியோ கூடுதல் ஊக்கம் பெற்று, சொந்தமாக இரண்டு புத்தகங்களை எழுதப் போவதாக அறிவித்தார். அவைகளில் ஒன்றுக்கு அவர் ''இருபதாம் நூற்றாண்டு தீர்க்கதரிசி“ என்னும் தலைப்பைக் கொடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். மற்றொன்று ''லவோதிக்கேயா சபை'' அல்லது அதைப் போன்ற வேறெதோ தலைப்பு. இப்புத்தகங்களின் ஆயிரக்கணக்கான பிரதிகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று பில்லி இன்றிரவு என்னிடம் கூறினான். யாரோ அவைகளை டெக்ஸாஸிலிருந்து கொண்டு வந்தார். அவை இங்குள்ளன. அதைக் குறித்து அவர்கள் அறிவிப்பார்கள். இவைகளுக்கான செலவை ஏற்க யாரோ முன்வந்துள்ளார் என்று நினைக்கிறேன். (sponsored). எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படி இருக்குமானால், இவை இலவசமாக உங்களுக்கு விநியோகிக்கப்படும். நீங்கள் அதை ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி ரசிப்பீர்களானால், பின்னாலுள்ள சகோ. வேயிலுடன் கைகுலுக்கி, உங்கள் பாராட்டுதலைத் தெரியப்படுத்துங்கள். நானும் அதை படிக்கவில்லை. அதை படிக்க நேர்ந்தால், ஒருக்கால் அதைக் குறித்து என் மனதை மாற்றிக் கொள்வேன். இந்த வாரம் எனக்கு தருணம் கிடைக்கும் பட்சத்தில், அதை படிக்கலாமென்று உத்தேசித்துள்ளேன். 15இது புதன் இரவு, நமது கூட்டம் அதிகாரப்பூர்வமாக நாளை இரவு தொடங்குகின்றது. ஆனால் இன்று உங்கள் மத்தியில் நான் இருப்பதால், நீங்கள் இங்குள்ளதை அறிந்து கொண்டு, எனக்கு வீட்டில் தங்கியிருக்க விருப்பமில்லை. உங்கள் உறவினர் யாராகிலும் வரும்போது, நீங்கள் சாலையின் ஒரு முனையை அடைந்து அவர்களைச் சந்திப்பது போன்றது இது. நானும் அவ்வாறே வந்து உங்களை ஜெபர்ஸன்வில்லுக்கு வரவேற்கலாமென்று எண்ணினேன். சென்ற வாரம் நான்... இல்லை, மன்னிக்கவும், மூன்று வாரங்களுக்கு முன்பு நான் வீடு திரும்பினேன். அரிசோனாவில் சில கூட்டங்களை நடத்தினேன். ஓய்வெடுக்க நான் திரும்பி வந்தேன். நான் வேட்டை பயணம் சென்றிருந்தேன். நான் சிங்கத்தை கொன்று அரிசோனா நாட்டில் சாதனையை ஏற்படுத்தினேன். அதைக் கொல்ல மரங்களின் வழியாக இருபது மைல் தூரம் அதை துரத்திச் செல்ல வேண்டியதாயிருந்தது. 16நான் சிறுவனாயிருந்தபோது, இப்படியெல்லாம் நடக்குமென்று நினைக்கவேயில்லை. இவை எப்படி நிகழ்ந்தன என்று உங்களுக்கு காண்பிப்பதற்காக; நாங்கள் வெளியேயுள்ள சில மாதங்களுக்கு, கர்த்தர் எங்களுக்கு அங்கே ஒரு சிறு இடத்தை தந்திருக்கிறார், பிள்ளைகளுக்கு ஒரு பள்ளியும். நான் சிறுவனாயிருந்த போது... ஜிம்மி பூல் இங்குள்ளார் என்று நினைக்கிறேன். ஒருக்கால் அவருடைய தந்தை ஜிம் பெரியவரும் இங்கிருக்கலாம். நாங்கள் ஒன்றாக பள்ளிக்கு சென்றோம். கிழிந்த சட்டையும், கிழிந்த டென்னிஸ் காலணியும் அணிந்து கொண்டு அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது. காலணிக்கு வெளியே விரல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். காகிதத்தை ஒரு பையனிடமும், பென்சிலை வேறொரு பையனிடமும் கடன் வாங்கி எழுதுவேன். நான் முன்பு செய்யுள் எழுதுவேன். என் பழைய ஃபோர்டு காரைக் குறித்து நான் எழுதின செய்யுளை திருமதி. உட் இன்று பிற்பகல் நான் கூறும்படி செய்து, அதை ஒலிப்பதிவு செய்தார்கள். அது ஒரு நல்ல செய்யுள். இதை “நாம் திரு. ஃபோர்டுக்கு அனுப்ப வேண்டும்'' என்று அவர்கள் கூறினார்கள். ''அதில் அதிக உண்மையுள்ளது'' என்று நான் கூறினேன். முன்னால் கலகலவென்று ஓசை உண்டாகுதலும், பல் சக்கரம் (gear) சரியாக வேலை செய்யாமலிருப்பதும், காரைத் திருப்புவதற்காக உள்ள பல் சக்கரம் சீனப் புதிரைப் போல் இருத்தலும். நான் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று காரில் நான்கு சக்கரங்கள் உள்ளனவா என்று எண்ணிப்பார்த்து விட்டு, காரைத் தள்ளி, அது ஒடும்படி செய்து, அதில் ஏறிக் கொள்வதே. என் செய்யுளில் இவ்வாறு எழுதினேன். நான் காரில் மலையின் மேல் சென்ற போது நன்றாக இருந்தது. அது, ''என்னால் முடியும் என்று நினைக்கிறேன். என்னால் முடியும் என்று நினைக்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டே மெள்ள இழுத்து சென்றது. ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் ''என்னால் முடியும் என்று நினைத்தேன், என்னால் முடியும் என்று நினைத்தேன்'' என்றது. நாமும் அப்படித்தான் மோட்சப் பிரயாணம் கதாபாத்திரத்தை போல் மலையின் மேல் மெள்ள ஏறிக் கொண்டிருக்கிறோம். எனவே நாம்... 17நான் இப்படி ஒரு செய்யுளை எழுதினேன். அது... அதை எழுதும்போது எனக்கு பன்னிரண்டு வயது மாத்திரமே என்பதை நினைத்துப் பாருங்கள். அன்று நான் மலைக் கணவாயைப் பார்த்து நின்று கொண்டு, சிங்கம் தன் குகை அறையில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அப்பொழுது நான் எழுதின ஒரு சிறு செய்யுள் எனக்கு ஞாபகம் வந்தது. நான் வீடு சென்று அதை கண்டெடுத்தேன். அது இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. சற்று நினைத்துப் பாருங்கள், எப்படி தேவன்... தேவன் தான் ஊக்கம் (inspiration) அனைத்தும் அளிப்பவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனே பாடலை எழுத வேண்டும். தேவன் பாடல்களில் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு அவ்வாறு கூறியுள்ளார். அவர் தாவீது எழுதின சங்கீதங்களைக் குறிப்பிட்டு, ''தாவீது சங்கீதத்தில் இவ்வாறு கூறினான் என்று உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். சிலுவை மரணத்தைப் பாருங்கள். தாவீது அதைக் குறித்து 22ம் சங்கீதத்தில் பாடினான். “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது. என் கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்” என்று. அது ஒரு பாடல். சங்கீதம் என்பது பாடல். 18நான் எழுதின இந்த செய்யுள் எவ்வாறு நிறைவேறினது என்பதைக் கவனியுங்கள். ஒரு சிறுவனாக அங்கு கடன் வாங்கின காகிதத்தில் நான் எழுதின இந்த செய்யுள்: ஓ, தென் மேற்கில் தூரத்தில் நான் தனிமையிலிருந்தேன் அங்கு நிழல்கள் மலை சிகரத்தின் மேல் படர்ந்தன. நீல நிற மந்தார நேரத்தில் பதுங்கியுள்ள ஒரு ஓநாயை என்னால் காண முடிகிறது. மாடுகள் புல் மேயும் இடத்தில் ஒரு நரி ஊளையிடுவதை என்னால் கேட்க முடிகிறது. அரிசோனாத் தொடரிலுள்ள தூரத்து காடாலினா மலைகளில் மலைக் கணவாயில் எங்கோ ஒரு சிங்கம் சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது. 19இதை எழுதி நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த மலைக் கணவாயில் நான் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அந்த சிங்கம் என்னை முறைத்துப் பார்த்தது. ஓ, தேவனே, நதிக்கு அப்பால் எங்கோ ஒரு தேசம் உள்ளது. அது அங்கு இருக்கத்தான் வேண்டும். பாருங்கள்? அதைக் குறித்து அநேக சம்பவங்கள் உரைக்கின்றன. இவையனைத்தும் கட்டுக் கதையல்ல. அவை உண்மையானவை. அவை தத்ரூபமானவை. அங்கு நான் நித்திய காலமாக வாழ எதிர்பார்க்கும் மக்களுடன் இன்றிரவு இங்குள்ளதற்காக நான் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். அங்கு வியாதியில்லை, மரணம் இல்லை, பிரிவினை இல்லை. பிரயாணம் செய்வதென்பது நமக்கு ஒரு எளிதான செயலாயிருக்கும். 20தேவனுடைய வார்த்தையைப் படிக்காவிட்டால், எந்த கூட்டமும் நிறைவு பெறுவதில்லை... சகோ. நெவில், நான் அங்கு நடந்து சென்றேன். நான் பேச வேண்டுமென்று நீர் விரும்புவதாக பில்லி என்னிடம் கூறினான். சகோ. நெவில், அது உண்மைதானா? நான் அப்படி செய்வேன் என்று நீங்கள் அதிகமாக என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். அதைக் கேட்டதும் எனக்கு நல்லுணர்வு தோன்றினது. பாடல்களைப் பாட விரும்புவோர் சகோ. நெவிலிடம் தொடர்பு கொண்டு, நீங்கள் எப்பொழுது பாடவேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொடக்க ஆராதனையை, அரைமணி நேரம் வைத்துக்கொண்டு, அதன் பிறகு நாம் ஆழமான செய்திக்குச் செல்வோம். கர்த்தர் என்ன செய்யப் போகிறார் என்று நாம் பார்ப்போம். நான் நம்புகிறேன்... 21நம்மிடம் சத்தியம் உண்டு என்று நான் நம்புகிறேன். அதைக் குறித்து எனக்குத் திருப்தி. பதரானது கோதுமை மணியை விட்டு முற்றிலுமாக விலகிக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், அதைக் குறித்த ஒரு முன்னுரையை அதாவது, எப்படி பதர் கோதுமை மணியை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது என்பதை நாளை இரவு அளிப்பேன். ஆனால் கோதுமை மணியானது முதிர்வடைவதற்காக சூரியனுடைய சமூகத்தில் கிடத்தப்பட வேண்டும். நண்பர்களே, அதற்காகவே நாம் இங்கிருக்கிறோம். இந்த சிறு குழு கிறிஸ்துவுக்காக முதிர்வடையும் வரைக்கும் குமாரனின் சமூகத்தில் தங்கியிருந்து, அவருடைய மேசையின் மேல் அப்பமாக ஆகவேண்டும், அதைதான் அது செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். செய்யுள்களை கூறி முடித்த பின்பு, வார்த்தையை அணுகுவதற்கு முன்னதாக, நாம் மறுபடியும் ஜெபம் செய்வோம். அதன்பிறகு நாம் பேசுவதற்காக ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 22அன்புள்ள இயேசுவே, உம்மிடம் காத்திருக்கும் இந்நேரத்தில், இந்த சில வார்த்தைகளைப் பேசுவதற்கென, இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே, உமது கிருபையும் இரக்கமும் எங்கள் மேல் தங்கியிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். எங்கள் இருதயங்களை மிருதுவாக்கும். பதர்களையும், முட்களையும், நெறிஞ்சல்களையும் அகற்றுவீராக. கர்த்தாவே, ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய சூரிய வெளிச்சம் வார்த்தையின் மேல் விழுவதாக. எங்களுக்கு மகத்தான கூட்டம் உண்டாகி, எங்கள் மத்தியில் இரட்சிக்கப்படாத ஒருவராவது இராதபடி செய்து, எல்லா பிள்ளைகளும் தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கும்படி அருள்புரியும். பிதாவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாதவர் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே, நாங்கள் இக்காலத்தில் அறிந்து கொள்ள வேண்டுமென்று நியமிக்கப்பட்டுள்ள எல்லா மகத்தான இரகசியங்களும் எங்களுக்காக திரை நீக்கப்பட்டு அளிக்கப்பட்டு, தேவனுடைய தெளிவுத் தன்மையை நாங்கள் காணவும், நாங்கள் எவ்விதமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை அறிந்து கொள்ளவும், எங்களை நாங்கள் திருத்திக் கொண்டு, எங்கள் சரீரத்தின் உறுப்புகளை வார்த்தையின் ஒழுங்குக்குள் கொண்டு வரவும், கர்த்தராகிய இயேசு வரப்போகும் நாள் சமீபமாயிருக்கும் இந்நாளில் நாங்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்படியும் செய்யும். கர்த்தாவே, இன்றிரவு நான் வார்த்தையைப் படிக்கும் போது, கல்விக் குறைவினால், நான் சில வார்த்தைகளை சரியாக உச்சரிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவர் மாத்திரமே அதிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்தெடுக்க முடியும். நீர் ஒருவர் மாத்திரமே அதை செய்யமுடியும். மானிடர் எவரும் அதைச் செய்ய வழியில்லை. கர்த்தாவே, அது உமது கரங்களில் மாத்திரமே உள்ளது. எனவே ஒவ்வொரு இரவும், உமது வார்த்தையில் மறைந்து கிடப்பவைகளை எங்களுக்களித்து, நாங்கள் மேலான கிறிஸ்தவர்களாக, நாங்கள் வாழும் இக்காலத்துக்கு ஏற்றவர்களாக வாழ்ந்து, கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படி செய்யும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 23உங்கள் வேதாகமத்தில், யோனாவின் புத்தகத்துக்கு நீங்கள் திருப்ப வேண்டுமென்று விரும்புகிறேன். அது ஒரு... யோனா பின்வாங்கிப் போன ஒருவன் என்று நாம் அடிக்கடி கூறுகின்றோம், ஆனால் நானோ யோனாவின் சார்பில் பேசுபவன். யோனா பின்வாங்கிப் போனான் என்று நான் நம்புவது கிடையாது. நாம் பின்வாங்கிப் போனவர்களைப் பார்த்து, “அவன் ஒரு யோனா'' என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை... யோனாவைக் குறித்து நான் கொண்டுள்ள கருத்து என்னவென்றும், என்ன நடந்ததென்றும் நான் உங்களிடம் இதற்கு முன்பு கூறி, இதை வேறொரு கோணத்தில் அணுகியிருக்கிறேன். அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமூகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி, தர்ஷிசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமூகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். யோனா 1:1-3 அது ஒரு வருத்தமான முடிவு அல்லவா? “கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன்”. அதுவே என்னுடைய பொருள். 24முதலாவதாக, இதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும், யோனா... அதை அவன் செய்ய முக்கியமான காரணம் என்னவெனில்; யோனா ஒரு யூதன், அவன் ஒரு புறஜாதி நகரத்துக்கு விரோதமாக பிரசங்கிக்கும்படி கட்டளை பெற்றான். அவன், அங்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டான் என்று எண்ணினான். அந்த புறஜாதியார், ''இந்த யூதனுக்கு நம்மிடையே என்ன வேலை?'' என்று நினைப்பார்கள் என்று அவன் கருதினான். ஆனால் பாருங்கள், நாம் ஒரு பெரிய உண்மையைக் காண இந்த சம்பவம் நமக்கு ஒரு தருணம் அளிக்கிறது. அதாவது, தேவன் யூதர்களுக்கு மாத்திரம் தேவன் அல்ல, புறஜாதிகளுக்கும் தேவன் என்னும் உண்மை. அவர் எல்லா ஜனங்களுக்கும் தேவனாயிருக்கிறார். ஆனால் அவர் யூதர்களை தெரிந்து கொண்டார். 25யூதர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தெரிந்து கொள்ளப்பட்டனர். அந்த நோக்கம் என்னவெனில், அவர்களுக்கு நியாயப்பிரமாணம் அளிக்கப்படவே. நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள முடியாது என்பதை தேவன் அவர்கள் மூலம் காண்பித்தார். அவர் நீதியுள்ள தேவனாக இருப்பாரானால்... நியாயப்பிரமாணம் நீதியைக் கேட்டது. ஆனால் ஒரு மனிதனை விடுவிக்க அதில் கிருபை இல்லை. நியாயப்பிரமாணம் மனிதனுக்காக தண்டனை எதுவும் கிரயமாக செலுத்தவில்லை. நியாயப்பிரமாணம் நம்மை கீழ்ப்படுத்தி நமக்கு தண்டனை அளித்தபோது, அந்த தண்டனையை கிரயமாக செலுத்துவதற்கு கிருபை அவசியமாயிருந்தது. 26வேதத்தில், சிறு தீர்க்கதரிசியாக (Minor prophet) கருதப்படும் யோனா அந்த நகரத்துக்கு செல்லும்படி கட்டளை பெற்றான். இங்கு நம் அனைவருடைய உதாரணத்தையும் நாம் காண்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஏதாவதொன்றிலிருந்து ஓடிவிடுகிறோம். நாம் தொல்லைகளிலிருந்து ஓடிவிடுகிறோம், பொறுப்பிலிருந்து ஓடிவிடுகிறோம், நாம் அனைவருமே அப்படி செய்யக் கூடியவர்களாயிருக்கிறோம். நாம் நின்று அதை சந்திப்பதைக் காட்டிலும் அதை விட்டு ஓடிப்போகக் கூடியவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? அவ்வாறு ஓடிப்போகும் நிலையில் நம்மைக் காண்கிறோம். சில நேரங்களில் வேலையை விட்டு நாம் ஓடுகிறவர்களாயிருக்கிறோம். நமக்கு வேலை செய்ய பிரியமில்லை. வேலை செய்யாமலேயே வாழ்க்கையை நடத்தலாமென்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் ஒரு எறும்பைக் கவனித்து கற்றுக் கொள்ளவேண்டுமென்று சாலொமோன் கூறினான் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா, ஒரு சிறு எறும்பு உழைத்து ஆகாரத்தை சேமித்து வைக்காத எந்த ஒரு எறும்பும், மாரி காலத்தில் ஆகாரத்தை உண்ணாதிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். 27நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு, நாம் சந்திக்க வேண்டிய பொறுப்புகள் அநேகம். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை சந்திக்க வேண்டியவர்களாயுள்ளனர். உங்கள் மனைவியைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில், அல்லது கணவனைத் தெரிந்து கொள்ளும் விஷயத்தில், உங்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு. பிறகு நீங்கள் ஞாபகம் கொள்ள வேண்டும்... ஒருக்கால் நீங்கள் ஒரு வீட்டைக் கட்டலாம். அது ஒரு அழகான வீடு, பிறகு ஞாபகம் கொள்ளுங்கள், மணமான பெண் என்னும் முறையில், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு உங்களுக்குண்டு, அந்த அழகான சுவர்களில் பிள்ளைகள் கைகளை வைத்து, அவைகளை அழுக்காக்காதபடிக்கு நீங்கள் பாதுகாக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பொறுப்பு உங்களுக்குண்டு. அவர்களுக்கு உடுக்க உடைகளையும், உண்ண உணவையும் அளிக்க வேண்டிய பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். எல்லாமே பொறுப்புதான். பொறுப்பை வகிக்காமல் அதை தள்ளி விடுவது மிகவும் எளிதான செயல். விவாகம் என்பது எல்லாவிதங்களிலும் பொறுப்பு வாய்ந்தது என்று நாம் காண்கிறோம். இதைக் கூறுவது கடினம் தான், ஆனால் அது உண்மை. அதாவது போதகர்கள், உண்மையான தேவனுடைய வார்த்தை அவர்களை சந்திக்கும் போது, அதற்காக உறுதியாய் நிற்பதற்கு பதிலாக, தங்கள் பொறுப்பை உதறித் தள்ளிவிடுகின்றனர். மானிடராகிய நாமும் கூட, தேவனுடைய வார்த்தையின் சத்தியம் நம்மை முகமுகமாய் சந்திக்கும் போது, அதை கடைசி வரைக்கும் உதறித் தள்ளிவிடக்கூடிய மனப்பான்மையைப் பெற்றுள்ளோம். 28சற்று முன்பு தான் என் மருமகனிடம் (nephew) நான் பேசினேன். அவன் ஒரு கத்தோலிக்கன்... சில ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவன் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு கத்தோலிக்கனாக மாறிவிட்டான். அவனுடைய தாய் மரிக்கும் போது, என் கரங்களைப் பிடித்துக் கொண்டு, ''மெல்வினைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்னும் கடைசி வார்த்தைகளை என்னிடம் கூறினாள். அவனுக்கு இப்பொழுது சொப்பனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் அவன் சொப்பனம் காண்கிறான். அவன், ''பில் மாமாவே, நீங்கள் நின்று கொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, நான் உங்களிடம் ஓடி வந்து பாவ அறிக்கை செய்ததாக சொப்பனம் கண்டேன். உடனே விழித்துக் கொண்டேன். நான் தவறு செய்துவிட்டேன்'' என்றான். நான், ''மெல்வின், அதற்கு உனக்கு விளக்கம் தேவையில்லை. அதுதான் உனக்கு சொந்தமான இடம் என்றேன். அது உண்மை. பாருங்கள்? 29ஆனால், பொறுப்பை வகிப்பதென்பது சில நேரங்களில், நமது தோலை உரித்துவிடும் அளவுக்கு அவ்வளவு கடினமாகிவிடுகின்றது. தந்தை என்னும் முறையில், உங்கள் பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குண்டு, பிள்ளைகளை அடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் தந்தை அல்லது தாய் என்னும் முறையில், பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குண்டு. ஏனெனில், ''பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்'' என்று வேதம் கூறுகின்றது. (நீதி. 13 : 24). இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனோதத்துவ நிபுணரின் பார்வையிலும் அது இன்னமும் நல்லதாகத் தென்படுகின்றது. அது இன்னமும் தேவனுடைய சத்தியமாக நிலைத்து வருகின்றது. அதை மாத்திரம் நாம் கையாண்டு வந்திருந்தால், இளைஞரின் நெறி தவறுதல் (Juvenile delinquency) போன்ற துர்நாற்றமான காரியங்கள் நம்மிடையே இன்று காணப்படாது. ஆனால் வீட்டிற்கான அந்த பழமையான பொன்னான சட்டம் நீண்ட காலம் முன்பே கைவிடப்பட்டு, பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி நடக்க அனுமதிக்கப்படுகின்றனர். 30நான் கூறினது போன்று, போதகர்களும் கூட சத்தியத்தை முகமுகமாய் சந்திக்கும்போது, அதைவிட்டு அகன்று சென்றுவிடுகின்றனர். பாருங்கள், அதை சந்திக்க விருப்பமில்லாத ஏதோ ஒன்று அவர்களை ஆட்கொண்டுள்ளது போல் தோன்றுகின்றது. அநேக முறை ஜனங்கள் என்னிடம் வந்து, ''சகோ. பிரான்ஹாமே, அது உண்மையென்று எனக்குத் தெரியும். ஆனால் அதை நான் செய்தால், அவர்கள் என்னை சபையிலிருந்து துரத்திவிடுவார்களே!'' என்கின்றனர். அதனால் என்ன? அப்படி நீங்கள் செய்யாவிட்டால், மேலேயிருந்து அவர்கள் உங்களை துரத்திவிடுவார்கள். எங்காவது ஓரிடத்திலிருந்து நீங்கள் துரத்தப்பட வேண்டும். பாருங்கள்? எனவே நீங்கள் அதிலிருந்து ஓடிவிடுவதற்குப் பதிலாக, அதை ஏற்றுக் கொண்டு, ''நல்லது, நான் ஏற்றுக் கொள்ளுகிறேன், நான் பின்வாங்க மாட்டேன்“ என்று கூறுவது நலம். நீங்கள் ஏற்றுக் கொண்டு, அதை அதிகமாகக் கேட்டு, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்று இயேசு கூறினார். (யோவான் 5:39). ஆனால் ஜனங்களுக்கோ அதை முகமுகமாய் சந்திக்க பிரியமில்லையென்று நாம் காண்கிறோம். நாம் தேவனுடைய சமூகத்துக்கு கொண்டு வரப்பட்டு, தேவன் ஒன்றை வாக்களித்துள்ளார் என்பதை காணும்போது, அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற தேவன் கடமைப்பட்டிருக்கிறார். அந்த வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றும்போது, அந்த மணி நேரத்துக்கான செய்தியை ஏற்றுக் கொள்ளவேண்டிய பொறுப்பை முகமுகமாய் சந்திக்க அவர்கள் பயப்படுகின்றனர். அதை நாம் எல்லாவிடங்களிலும் காண்கிறோம். 31லூத்தரன்களாகிய உங்களைக் குறித்து என்ன? லூத்தர் நீதிமானாக்கப்படுதல் என்னும் சத்தியத்தை கொண்டு வந்த போது, அதை ஏற்றுக் கொள்ள எத்தனை பேர் பயந்தனர்? அவர்கள் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து வெளிவந்து, இயேசு கிறிஸ்துவை அறிக்கையிட்டு, லூத்தரன்களாக ஆவதற்கு என்ன கிரயம் செலுத்த வேண்டியிருந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒருக்கால் அதற்காக அவர்களுடைய ஜீவனையே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் கவனியுங்கள். நீங்கள் எல்லோரும் உருளும் பரிசுத்தர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டீர்கள். அது உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அவர்கள் ஆவியின் அபிஷேகத்தின் கீழ்வந்து, தங்கள் உடல்களில் உதறல்கள் (jerks) ஏற்பட்டன. அவர்களுக்கு உதறல்கள் ஏற்பட்டதாக, அவர்கள் கூறினர். பெந்தெகொஸ்தேயினர் அல்ல, அநேக ஆண்டுகளுக்கு முன்பிருந்த மெதோடிஸ்டுகள். அவர்கள் உதறி குலுக்கி, தேவனுடைய வல்லமையினால் கீழே விழுந்தனர். அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து, காற்று வீசி அவர்களை தெளிவிக்க வேண்டியதாயிருந்தது. மெதோடிஸ்டுகளே, நீங்கள் ஒரு காலத்தில் உருளும் பரிசுத்தர் என்று கருதப்பட்டீர்கள்... உங்கள் முன்னோர்கள் சத்தியத்தை முகமுகமாய் சந்தித்து அதை ஏற்றுக் கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டியவர்களாயிருந்தனர். 32வரங்களைத் திரும்பவும் பெற்றுக் கொண்ட பெந்தெகொஸ்தேயினராகிய உங்களைக் குறித்து என்ன? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உண்டாகி, அந்நிய பாஷை பேசுதலும், மற்ற ஆவியின் வரங்களும் சபைக்கு மீண்டும் வந்த போது, மெதோடிஸ்டுகள் உங்களைத் துரத்திவிட எண்ணி, அவ்வாறே செய்தார்கள். நீங்கள் அதை சந்திக்க வேண்டியதாயிருந்தது. அதை நீங்கள் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் என்னும் பிரச்சினை தோன்றி, அது உண்மையென்று நீங்கள் கண்டபோது, என்ன நடந்தது? நீங்கள் அதை சந்தித்து, ஏதாவதொன்றை செய்ய வேண்டியதாயுள்ளது. உங்களுக்கு ஒரு பொறுப்புள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. இவைகளை நீங்கள் சந்தித்தே ஆகவேண்டும். சரி. 33இவைகளை நீங்கள் இந்த நாளில் காணும் போது, தேவனுடைய வார்த்தை வாக்களித்தவை இப்பொழுது நிறைவேறுவதை நாம் காணும்போது, அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அல்லது அதனின்று அகன்று செல்ல வேண்டிய பொறுப்பை நாம் பெற்றுள்ளோம். நீங்கள் நடுநிலைமை வகிக்க முடியாது; “அதைக் குறித்து நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள்... ஏதாவதொன்று செய்யப்பட வேண்டும். நீங்கள் சபைக்குள் வந்து விட்டு, அதே ஆளாக வெளியே செல்ல முடியாது. நீங்கள் உள்ளே வந்து வெளியே செல்ல முடியாது. நீங்கள் உள்ளே வந்து வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், நீங்கள் தேவனை விட்டு அகல வேண்டும், அல்லது அவர் அருகாமையில் வரவேண்டும். ஓ, இவைகளை உதறித் தள்ளுதல் என்பது ஜனங்களுக்கு எவ்வளவு எளிதாயுள்ளது! நாளை இரவு நாம் அதிகாரப் பூர்வமான ஆராதனைகளை தொடங்கும் போது, இவைகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன். இதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஏதாவதொன்று உங்களை சந்திக்கும்போது அதைக் குறித்த ஒரு கேள்வி இருக்குமானால், அதற்கான ஒரு பதிலும் இருக்கவேண்டும். 34உதாரணமாக, நான் மேற்கே போகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் இந்த வழியாகச் செல்ல வேண்டுமென்று நீங்கள் எனக்குச் சுட்டிக் காண்பிக்கிறீர்கள். நான் இலக்கை கடந்து வடமேற்கே சென்றுவிடுகின்றேன். பிறகு வேறு யாராவது இந்த வழியாக செல்ல வேண்டுமென்று சுட்டிக் காட்டுகின்றார். நானும் அந்த வழியே செல்கிறேன். நான் மறுபடியும் இலக்கை கடந்து, இம்முறை தென்மேற்கே சென்றுவிடுகிறேன். நல்லது, மேற்கு எது என்னும் கேள்வி உள்ளவரையில், அதற்கான நேரடியான பதில் எங்காகிலும் இருக்க வேண்டும். அவ்வாறே வேத உண்மைகளைக் குறித்த கேள்விகள் நம்மில் எழும்போது, அதற்கான சரியான விடைகள் எங்காகிலும் இருந்தே ஆக வேண்டும். அது உண்மை. அது இருந்தே ஆக வேண்டும்... ஏதாகிலும் ஒன்று நமது முன்னிலையில் வைக்கப்படும் போது, ''ஓ, அது அர்த்தமற்றது. அப்படிப்பட்ட ஒன்றை என்னால் நம்பமுடியாது, என்னால் நம்பவே முடியாது“ என்று கூறி, அதனின்று விலகி ஓடிவிடுவதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் வேதாகமத்தை எடுத்து உட்கார்ந்து, அதை ஆராய்ந்து பார்க்கக்கூடாது? வேதாகமத்தை படித்துப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். வேதாகமத்தைப் படியுங்கள். நீங்களே இதை தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வார்த்தையை வார்த்தையுடன் ஒப்பிடுங்கள். அந்த ஒரு வழியில் மாத்திரமே, அது உண்மையை உரைக்க முடியும். அது ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய உண்மையை உரைக்கவேண்டும்... கிறிஸ்துவே முழு வேதாகமத்தின் வெளிப்பாடாயிருக்கிறார். கிறிஸ்துவுக்குள் எல்லா பரிபூரணமும் வாசமாயிருந்து, வேதத்திலுள்ள எல்லா தீர்க்கதரிசனங்களும் அவரில் எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேறியுள்ளன. ஏனெனில் அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனாயிருக்கிறார். 35எனவே, இவைகளை நாம் காணும்போது, நாம் ஒரு கூட்டத்துக்கு வந்து, தேவனுடைய வல்லமை அசைவாடி, இயற்கைக்கு மேம்பட்ட கிரியைகளைப் புரிவதை நாம் கண்டு, அதை வேதத்துடன் ஒப்பிட்டு, அது இந்நேரத்துக்காக வாக்களிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும்போது, அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய பொறுப்பை பெறுகின்றவர்களாயிருக்கிறோம். அநேகர் அது சரியென்று கூறி அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் அதுவல்ல உங்களுடைய பொறுப்பு. 36நான் ஒரு வாலிபனாக இருந்து, மணம் புரிந்து கொள்ள ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். என் மனைவியாகும் தகுதி அனைத்தையும் பெற்ற பெண் அங்கிருக்கிறாள். அவள் நல் நடத்தையில் சிறந்தவள், அழகுள்ளவள், மிகவும் அருமையானவள், உண்மையான கிறிஸ்தவள், எனக்கு நல்ல ஒரு மனைவியாக வாய்ப்பதற்கு நான் கருத்தில் கொண்டுள்ள எல்லா தகுதியையும் அவள் பெற்றிருக்கிறாள். அவள் எவ்வளவு சிறந்தவளாக இருந்த போதிலும், அவளை எனக்கு மனைவியாக்கிக் கொள்ளும் பொறுப்பை நான் வகித்து அவளை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், அவள் என்னுடையவள் அல்ல. இந்த செய்தியும் அதே நிலையில் உள்ளது. இது சரியென்றும், இது, அது, மற்றது என்றும், ''அது உண்மையென்று நானறிவேன், அதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்'' என்றும் நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். அது உங்களின் ஒரு பாகமாகவும், நீங்கள் அதன் ஒரு பாகமாகவும் ஆகவேண்டும். நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டும். அப்பொழுது அது உங்களுடையதாகிவிடுகின்றது. நீங்கள் தெரிந்து கொண்ட இந்த குறிப்பிட்ட பெண்ணை மணம் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் இருவரும் ஒன்றாகிவிடுகின்றீர்கள். அப்படித்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் கூட ஆகிவிடுகின்றீர்கள். அவர் வெளிப்பட்டு தத்ரூபமாக்கப்படுவதை நீங்கள் காணும்போது, நீங்கள் அவருடைய பாகமாகிவிடுகின்றீர்கள், அவரும் உங்களுடைய பாகமாகிவிடுகின்றார். ஒருமித்து, நீங்கள் செய்தியின் பாகமாகிவிடுகின்றீர்கள். 37ஓ, இந்நாட்களின் யோனாக்களுக்காக, எத்தனை ஸ்தாபனக் கப்பல்கள் தர்ஷீசுக்குப் போய் கொண்டிருக்கின்றன. அந்த எளிதான பாதையில் செல்ல ஏறக்குறைய தொள்ளாயிரம் கப்பல்கள். அவர்களுக்கு அதை சந்திக்க பிரியமில்லை. யோனாவுக்கு புறஜாதிகளிடம் செல்ல வேண்டிய சூழ்நிலையை சந்திக்கப் பிரியமில்லை. நீங்கள் மனந்திரும்பாமல் போனால், “நாற்பது நாட்களுக்குள் அழிந்துவிடுவீர்கள்” என்னும் அந்த கொடூரமான செய்தியைக் கொண்டு செல்ல அவன் விரும்பவில்லை. அப்படி செய்வது அவனுக்கு வெறுப்பாயிருந்தது. “அந்த புறஜாதியார் எனக்கு என்ன செய்வார்களென்று எனக்குத் தெரியாது'' என்று அவன் மனதில் எண்ணினான். ஆனால் அவன் அதை சந்திக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? ஆனால் அவனோ ஒரு எளிதான வழியில் செல்ல எண்ணி, தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் ஏறி, கீழ்த்தட்டில் இறங்கிப்போய் அயர்ந்த நித்திரை பண்ணினான். எளிதான பாதையில், எளிதான வழியில் சென்றான். 38அதுவே மக்களால் விரும்பப்படும் பிரபலமான வழியாகும். அந்த வழியில் செல்வது எளிது. அப்பொழுது எல்லோரும் உங்கள் முதுகைத் தட்டிக் கொடுத்து உங்களை நல்லவர்கள் என்று புகழ்ந்து இவர் இன்னார் இன்னார் என்பார்கள். அப்பொழுது உலகம் உங்களை மதிப்புடன் நோக்கும். எல்லோரும் செல்லும் பிரபலமான வழியில் செல்வது எளிது. ஆனால் நீங்கள் வித்தியாசமான ஒன்றை செய்ய வேண்டும் என்னும் போது, நீங்கள் உண்மையென்று அறிந்துள்ள ஒன்றின் மேல் உறுதியாக நிற்க வேண்டியது அவசியமாயுள்ளது. அதுதான் மிகவும் கடினமான செயல், அங்கு தான் உரசல் ஏற்படுகின்றது. ஓ, நாம் இந்த பழமையான பாடலை அடிக்கடி பாடியிருக்கிறோம்: கடல் அமைதியாயுள்ளபோது கப்பலில் செல்வது எவ்வளவு எளிது யேகோவாவின் மகத்தான கரத்தின் பலத்தின் மேல் நம்பிக்கையாயிருப்பது. ஆனால், காற்று அலைகளின் மேல்மோதி, அலைகள் உயர எழும்பட்டும். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருமுறை என்னிடம் கூறப்பட்டது போன்று இது உள்ளது. குதிரை வண்டிகள் இருந்த காலத்தில், “ஒரு நாள் ஒரு ஸ்திரீ குதிரை வண்டியில் சபையிலிருந்து திரும்ப வந்து கொண்டிருந்தபோது, குதிரைகள் தலை தெறிக்க ஓடினதாம். அப்பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள்?'' என்று கேட்டபோது, “கயிறுகள் அறும் வரைக்கும் நான் கர்த்தரை நம்பியிருந்தேன்'' என்று அந்த ஸ்திரீ பதிலுரைத்தாளாம். கர்த்தரின் மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டிய சமயம் அதுவே. கயிறுகள் அறும் வரைக்கும் நீங்கள் நம்பியிருக்கிறீர்கள். ஆமாம். 39எனவே, நாம் செல்வதற்கு அநேக எளிதான வழிகள் உள்ளன என்று காண்கிறோம். தர்ஷீசுக்குப் போகும் கப்பல்கள். அது எளிது, பொறுப்பு எதுவுமில்லை, எல்லாமே உங்களுக்குக் கிடைக்கின்றது, எல்லோருமே உங்கள் மேல் பிரியம் கொள்கின்றனர். நீங்கள் யாரிடமும் கருத்து வேற்றுமை கொண்டிருப்பதில்லை. ஆனால் அது உணவு தட்டுகளைத் துடைக்கும் கந்தைத் துணியேயன்றி வேறில்லை (அது உண்மை! ஆமாம்!), ஒன்றுக்கும் உதவாதது, தோல்வியடைந்த ஒன்று! நீங்கள் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை... நீங்கள் உண்மையென்று அறிந்துள்ளதன் பேரில் உறுதியாக நிற்பீர்களானால், நாணயமான ஜனங்கள் உங்களைக் குறித்து பெரிதாக நினைப்பார்கள். அது உண்மை! 40எனக்குக் கவலையில்லை! ஒரு ஸ்திரீயை எடுத்துக் கொள்ளுங்கள். காண்பதற்கு ஒருக்கால் அவள் அழகாக இருக்கமாட்டாள். ஆனால் ஸ்திரீத்துவத்தின் கொள்கைகளுக்கு அவள் உறுதியாக நின்று, மதிப்புள்ள பெண்ணைப் போல் நடந்து கொண்டால், சிறிதளவு ஆண்மைத்துவம் கொண்ட எந்த ஒரு ஆணும் அவளை மணம் புரிந்து கொள்ள விரும்புவான். நிச்சயமாக. யாராகிலும் ஒருவர், தாங்கள் உண்மையென்று அறிந்துள்ளதன் பேரில் உறுதியாக நிற்பாரானால், அதை நாங்கள் பாராட்டுகிறோம். தண்ணீர் கலந்த பானம் போல் ஜனங்கள் எவ்வளவு அபத்தமாயுள்ளனர் (wishy-washy)! அது தான். இன்று அதிகமான கிறிஸ்தவர்கள் வழவழப்பாக இருந்து, ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, தங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டு, அல்லது சிறிது குதித்து கூச்சலிட்டால் அதுவே போதுமென்று நினைத்துக் கொண்டு, அதை கிறிஸ்தவ மார்க்கம் என்றழைக்கின்றனர். கிறிஸ்தவ மார்க்கம் என்பது தற்போதைய உலகில் தேவனுக்காக தினந்தோறும் வாழும் கரடுமுரடான வாழ்க்கையாம். அது தேவனுடைய அன்பின் அக்கினியை இருதயங்களில் தொடர்ந்து எரியச் செய்து, உங்களை அனலுள்ளவர்களாக்கி, நீங்கள். ஜனங்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை கிறிஸ்துவினிடம் திருப்பும்படி செய்கிறது. 41பொறுப்பு! ஆனால் உலகம் சென்று கொண்டிருக்கும் வழியில் செல்வதென்பது எளிது. ஆற்றின் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் திசையில் செல்வதென்பது எளிது, ஆனால் ஆற்றில் படகில் ஏறி அதற்கு எதிராக துடுப்பு வலித்துப் பாருங்கள்! உங்களால் வேகமாக செல்ல முடியாமல் அதிகநேரம் எடுக்கும், அது மிகவும் கடினமாயிருக்கும். ஆனால் துடிப்பு வலிக்காமல் விட்டுவிட்டு ஆறு பாயும் போக்கில் நீங்கள் செல்வீர்களானால், மரங்கள் உங்களை வேகமாக கடந்து செல்வதைக் காண்பீர்கள். ஆனால் நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்! படகு எளிதாக மிதந்து கொண்டிருக்கும்போது, நீங்கள் ஒரு பெரிய நீர் வீழ்ச்சியை அணுகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். உலகத்துடன் எளிதாக மிதந்து கொண்டிருக்கும் நீங்கள் விரைவில் அதில் சிக்கிக் கொள்வீர்கள். அவ்வாறு நடப்பது உங்களுக்குப் பிரியமில்லை. இல்லை, ஐயா! நீங்கள் உங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் அதை விசுவாசித்து அது உண்மையென்று கருதுகின்றீர்கள். 42இந்த செய்தியைக் கொண்டு செல்ல தேவன் நமக்கு அளித்துள்ள பொறுப்பு... எனக்கு வயதாகிக் கொண்டே போய், என் நாட்கள் குறுகுகின்றன என்று நான் நினைக்கும் போதெல்லாம், என் பொறுப்பை நான் அதிகமாக உணருகிறேன். வேகமாக செய்ய வேண்டும். நாம் நிச்சயம் அப்படி செய்யவேண்டும். நாம் எல்லாவிடங்களுக்கும் சென்று இச்செய்தியை அறிவித்து, இயேசுகிறிஸ்து வரப் போகின்றார் என்றும், அவரே தேவனென்றும், அவர் விரைவில் வரப் போகின்றார் என்றும், கர்த்தருடைய வருகையைத் தவிர இவ்வுலகிற்கு வேறு நம்பிக்கையே கிடையாது என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 43கர்த்தருடைய தூதன் சந்தித்தபோது என்னுடன் இருந்த சில நண்பர்களை நான் பின் வரிசையில் காண்கிறேன்... அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள். அது நிகழ்ந்த அந்த இடத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று நினைக்கிறேன். அன்று சகோ. உட் மலையின் மேல் ஏறிக் கொண்டிருந்தபோது, கர்த்தர் அவரிடம் என்ன கூறினார் என்பதை நினைவு கூருகிறேன். அவருடைய மனைவி வியாதிபட்டிருந்ததால் அவர் அழுது கொண்டிருந்தார். கர்த்தர் என்னிடம், ''கல்லைக் கையிலெடுத்து, மேலே எறிந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்று சொல்'' என்றார். நான் அப்படியே செய்தேன். இங்கு உட்கார்ந்திருக்கும் சகோ. உட் அதற்கு சாட்சி. நான், ''சகோ. உட், ஏதோ ஒன்று நிகழ்வதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்'' என்றேன். அடுத்த நாள், நாங்கள் எல்லோரும் ஒன்றாக நின்று கொண்டிருந்தபோது... அன்று என்னுடன் கூட இருந்த அநேகர் இன்றிரவு இங்குள்ளனர்... 44ஒரு வாலிப போதகர் அங்கிருந்தார், அவர் ஒரு... நான் கவனித்தேன். அவரை அதற்கு முந்தின இரவு தான் சந்தித்தேன். அவர் எங்கள் முகாமில் இருந்தார். அவர் எங்களுடனிருக்க மேலே வந்திருந்தார். அவர் என்னிடம், ''சகோ. பிரான்ஹாமே, நீங்கள் இப்படிப்பட்ட தரிசனங்களைக் காண்பதுண்டா?'' என்று கேட்டார். நான், ''ஆம், ஐயா! அவைகளினின்று அகன்று சற்று இளைப்பாறவே நான் இங்கு வருகின்றேன். இருப்பினும், இங்கும் அவர் தரிசனத்தில் எனக்குக் காரியங்களைக் காண்பிப்பதுண்டு'' என்றேன். நான் தொடர்ந்து, “இங்குள்ள இந்த மலையின் மேல் தான் ஏழு தூதர்கள் பிரத்தியட்சமாயினர்'' என்றேன். அவர், ''ஆம். நான் கேள்விப்பட்டேன்'' என்று சொல்லி விட்டு, ''நீங்கள் கலிபோர்னியாவில் நிகழ்த்தின கூட்டங்களை ஒழுங்கு செய்தவர்களில் நானும் ஒருவன்'' என்றார். “அதை கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்றேன். நான் அங்கு நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்த போது, பெரிய உருவம் படைத்த மருத்துவர் ஒருவர் அந்த போதகரின் கண்களைப் பரிசோதனை செய்து விட்டு, ''உங்கள் கண்களில் ஒன்றை நீங்கள் இழக்க நேரிடும். ஏனெனில் அது 'அலர்ஜி' (allergy)யால் பாதிக்கப்பட்டுள்ளது. நான் இரண்டு ஆண்டுகளாக அதற்கு சிகிச்சையளித்து வருகிறேன். ஆயினும், அந்த கண்ணை நீர் இழக்க போகின்றீர்'' என்று கூறுவதை தரிசனத்தில் கண்டேன். நான் போதகரிடம், ''அதை நீர் என்னிடம் கேட்கும் காரணம் என்னவெனில், அன்றொரு நாள் உங்கள் மருத்துவர், உங்கள் கண்ணை நீங்கள் இழக்கப் போவதாக உங்களிடம் கூறினார்'' என்றேன். அவர், ''அது உண்மை'' என்றார். அவர் இப்படி சுற்று முற்றும் பார்த்தார். அப்பொழுது நான், “அவருடைய தாயார் தன் காலுறைகளில் ஒன்றை அவிழ்த்து, தன் பாதத்தில் கால்விரல்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருக்கும் சிறு சதை வளர்ச்சி கட்டிகளை(tumors) அவரிடம் காண்பித்து, நீ சகோ. பிரான்ஹாமை சந்திக்க நேர்ந்தால், இதற்காக அவரிடம் ஜெபிக்கும்படி சொல்'' என்று கூறுவதை தரிசனத்தில் கண்டேன். நான் அவரிடம், ''உங்கள் தாயார் தன் பாதத்தை இப்படி நீட்டி, கால் விரல்களுக்கிடையே உள்ள சிறு சதை வளர்ச்சி கட்டிகளைக் காண்பித்து, 'சகோ. பிரான்ஹாமிடம் ஜெபிக்கும்படியாக சொல்' என்று கூறினார்கள்'' என்றேன். அவர், ''சகோ. பிரான்ஹாம், அது முற்றிலும் உண்மை'', என்றார். அவர் நின்று கொண்டு பிரகாசமான தன் கண்களினால் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். இம்முறை இலையுதிர் காலத்தின்போது அவரை நான் சந்தித்த போது, முகாமிலிருந்த அனைவரைக் காட்டிலும் நல்ல கண்கள் அவருக்கிருந்தன. கர்த்தர் அவருக்கு சுகத்தையளித்தார். 45நான் அங்கு நின்றுகொண்டிருந்த போது, என்ன நடக்கப் போகிறதென்பதை கர்த்தர் எனக்குக் காண்பித்தார். அவர், ''நியாயத்தீர்ப்பு மேற்கு கடற்கரையைத் தாக்கவிருக்கிறது'' என்று கூறிவிட்டு, “அந்த அடுப்பங்கரைக்கு (fire-place) அருகில் செல்” என்றார். என் கையில் நீண்ட பிடியுள்ள மண்வெட்டி (Shovel) ஒன்றிருந்தது. நான் அங்கு நடந்து சென்றேன்... சகோ. ராய் ராபர்ஸனை இங்குள்ள எல்லோருமே அறிவர், எனக்குத் தெரிந்த மட்டில், இன்றிரவு அவர் இங்கில்லை, அவர் அரிசோனாவில் இருக்கிறார். அவர் இங்குள்ள தர்மகர்த்தாக்களின் குழுவுக்குத் தலைவர். அவர் இராணுவத்தில் நீண்ட காலம் சேவை புரிந்தவர், ஏதோ ஒன்று நிகழவிருந்தது, அது அழகான, பிரகாசமான காலை வேளை 10 மணியாயிருந்தது. நாங்கள் பத்து அல்லது பன்னிரண்டு பேர் அங்கிருந்தோம். அவர்கள் கூடாரம் அமைத்துக் கொண்டும், பன்றிகளின் தோல்களை உறித்துக் கொண்டுமிருந்தனர். நான் அவர்களிடம் நடந்து சென்று, 'ராய்' சீக்கிரமாய் ஒளிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது'' என்றேன். அதற்கு மேல் என்னால் அவரிடம் கூற முடியவில்லை. நான் அங்கு சென்ற அந்த நேரத்தில் தானே... வானத்திலிருந்து தேவனுடைய சுழற்காற்று இறங்கிவந்து, கை தட்டுவது போன்ற ஓசையை எழுப்பி, மலையை குலுக்கி, மலைக்குள் ஊடுருவிச் சென்று, என் தலைக்கு மேல் ஐந்தடி உயரத்தில் சுற்றிலும் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி, அதனின்று தெறித்த கற்பாறைகள் மரங்களின் உச்சிகளை வெட்டி வீழ்த்தின. அது உயரே சென்று, மறுபடியும் கீழே பலத்த அபிஷேகத்துடன் இறங்கி, மலையைத் தாக்கி, கற்பாறைகளை இப்படி தெறிக்கச் செய்தது. அவ்வாறு அது மூன்று முறை செய்துவிட்டு, பிறகு மேலே சென்றது. சகோ. பாங்க்ஸ் என்னிடம் வந்து, ''இதைக் குறித்துதான் நீங்கள் நேற்று கூறினீர்களா?'' என்று கேட்டார். நான், ''ஆம், ஐயா! அதுதான் இது'' என்றேன். பாருங்கள்? அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்பு, அலாஸ்கா கிட்டத்தட்ட மூழ்கிவிட்டது. மேற்கு கரை முழுவதிலும் இடிகளும், கீழே தள்ளுதல்களும் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. இந்நாட்களில் ஒன்றில், அது சரிந்து சமுத்திரத்தில் மூழ்கிவிடும். அது உண்மை! அது என்ன? நாம் கர்த்தர் வரப்போகும் நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 46தத்துவங்களும் மற்ற வெவ்வேறு காரியங்களும் எழும்பியுள்ளதை நாம் கண்டுள்ளோம். இதற்கு ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டுமென்று நாம் அறிவோம். தேசத்திலுள்ள சிலர் குகைகளுக்குள் சென்று, ''மார்ச்சு 16ம் தேதியன்று கர்த்தர் வரப் போகின்றார்'' என்று கூறுகின்றனர். (இதைக் குறித்து நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்.) அது உண்மையல்லவென்று உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ''அவர் வரும் நாளையும் நாழிகையையும் ஒருவரும் அறியார்'' என்று இயேசு கூறியுள்ளார். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதை நாம் காணும்போது, எங்காவது உண்மையான பதில் இருந்தாக வேண்டும். சத்தியம் எங்காவது இருந்தாக வேண்டும். ஒரு கிழக்கு, ஒரு மேற்கு, ஒரு தென்கிழக்கு, ஒரு வடமேற்கு திசை உண்டு. இந்த பிரச்சினைக்கு உண்மையான விடை எங்காகிலும் இருந்தாக வேண்டும். 47அதை உதறித் தள்ளிவிடுவீர்களா? நாம் தேவனுடைய குமாரன் வரப்போகும், நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஜனங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். நாம் விழிப்புள்ளவர்களாயிருந்து தேவன்... எந்நேரத்திலும் முன்னேறிச் சென்று, மனிதனுக்கு சரியான விடையை அளிப்பதற்கு ஆயத்தமாயிருங்கள். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதாமின் காலம் முதற்கொண்டு, ஜனங்கள் உதறித் தள்ளிவிட்டு, தேவனை விட்டு அகன்று செல்பவர்களாயிருக்கின்றனர். ஆதாம் ஏதேன் தோட்டத்திலிருந்த போது, அவன் தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு அவன் மேல் விழுந்தது. அவன் தேவனுடன் தங்கியிருப்பானா அல்லது தன் மனைவியுடன் சென்றுவிடுவானா என்னும் தீர்மானம். அந்த பொறுப்பு அவன் மேல் இருந்தது. அவன் மனைவி கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தேவன் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன் தனது மனைவியின் வழியில் செல்ல தீர்மானித்தபோது... அவன் அப்படி செய்தபோது, அவன் தனது மூல நிலமையை இழந்து, முழு உலகத்தையும் மரணத்தில் ஆழ்த்தினான். தன் மனைவி கண்டு கொண்ட, தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடான புது வெளிச்சத்தை அவன் ஏற்றுக்கொள்வதா என்று தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பை அவன் பெற்ற பொழுது... ஓ, தேவனே! அதை யோசித்து பாருங்கள். அவர்கள் கைக்கொள்ள தேவன் அவர்களுக்கு எட்டு அல்லது பத்து வார்த்தைகள்: மாத்திரமே அளித்திருந்தார். அதாவது, ''அந்த மரத்திலுள்ள அந்த கனியைப் புசிக்கக் கூடாது. அதை மாத்திரமே அவர்கள் கைக்கொள்ள வேண்டியவர்களாயிருந்தனர். அந்த சில வார்த்தைகளையும் கூட அவர்கள் மீறினர். ஆதாம், என் மனைவி சொற்படி நான் நடக்க வேண்டுமா, அல்லது தேவன் சொன்னபடி நான் நடக்கவேண்டுமா?“ என்பதை முகமுகமாய் சந்திக்க வேண்டியவனாயிருந்தான். அவன் கண்களைத் திறந்தவாறே: அவரை விட்டு விலகி சென்றான். அந்த பொறுப்பை அவன் வகிக்க வேண்டியவனாயிருந்தான். அது மானிட வர்க்கம் அனைத்தையுமே மரணத்தில் ஆழ்த்தியது. 48பின்பு மற்ற ஆதாமாகிய கிறிஸ்து வந்தார். அவரைப் போல் யாருமே இல்லை. சிலர் அவர் தேவன் அல்ல என்கின்றனர். அவருடைய ஒப்பற்ற தன்மை அவர் தேவன் என்பதை நிரூபித்தது. அவரைப்போல் வாழ்ந்த வேறு எந்த சிருஷ்டியும் இல்லை. அவர் உடலுறவு ஆதிக்கத்திற்கு அப்பால் பிறந்தார். அல்லேலூயா! அவர் மாமிசத்தில் தோன்றிய சிருஷ்டிகர். அவருக்கு முன்னால் யார் நிற்கக் கூடும்? அவரைப்போல் பேசினவர் யார்? அவர் சொன்னவைகளை யார் சொல்ல முடியும்? அவர் செய்த காரியங்களை யார் செய்யக்கூடும்? அவருடைய ஒப்பற்ற தன்மை அவர் தேவன் என்பதை நிரூபித்தது. அவர் செய்தவைகளை தீர்க்கதரிசியோ அல்லது வேறு யாருமே செய்யமுடியாது. கல்லறையிலிருந்து மரித்தோரை யார் உயிரோடெழுப்ப முடியும்? யார் வானங்களை அடைக்க முடியும்? யார் தான் விரும்பின எல்லாவற்றையும் செய்ய முடியும்? அவர் தேவன்! அவருடைய ஸ்தானத்தை வேறு யார் வகிக்க முடியும்? அவர் மாமிசத்தில் நமது மத்தியில் வாசம் செய்த பரிபூரணமான, நித்தியமான தேவனேயல்லாமல் வேறு யார்? 49அவருக்கு ஒப்பாக ஒன்றுமில்லை. அவர் தனக்கே உரிய உலகத்தில் வாழ்ந்தார். அவரைப் போல் பேசின எந்த மனிதனும் இல்லை. அவர் வாயைத் திறந்த போது அதில் ஏதோ ஒன்று இருந்தது. மற்றவர்கள் கூறினதைக் காட்டிலும் வித்தியாசமானது அவர் வாயிலிருந்து புறப்பட்டு வந்தது. அவர் ஒரு சாதாரண மனிதன் என்று ஒருவர் கூறினார். அதை நான் எதிர்க்கிறேன். அவர் தேவனாயிருந்தார். அவரைப் போல் எந்த மனிதனும் பேசவில்லை. அவரைப் போல் எந்த மனிதனும் பேச முடியாது. ஏனெனில் அவரே மாமிசத்தில் தோன்றின ஜீவ வார்த்தை, தேவனின் பரிபூரணம் அவரில் வெளிப்பட்டது. தீர்க்கதரிசிகள் தங்கள் செய்திகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் முன் காலத்திலும் பெற்றிருந்தனர், இப்பொழுதும் பெற்றுள்ளனர். ஆனால் இயேசுவிலோ தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருந்தது. அவர் ஒப்பற்றவர். அவர் மகத்தான வல்லமையை பெற்றிருந்த போதிலும், இந்த பிரச்சினையை அவர் சந்திக்க வேண்டியதாயிருந்தது. அவர் இவ்வுலகத்தின் ராஜாவாக ஆகியிருக்கலாம். அவர் அப்படித்தான் ஆகப்போகின்றார். அவருடைய பரிசுத்தவான்களுக்கு அவர் அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறார். 50அவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். தலை சாய்க்க இடமில்லாத எந்த ஏழை மனிதனுக்கு, ஒரு மீன் ஒரு நாணயத்தை விழுங்கினது தெரியும்? தலை சாய்க்க இடமில்லாத எந்த ஏழை மனிதனால், கற்சாடிகளில் நிறைத்திருந்த தண்ணீரை திராட்ச ரசமாக்க முடியும்? அவருடைய கரங்களில் அளிக்கப்பட்ட பொறுப்பை அவர் சந்திக்க வேண்டியதாயிருந்தது. மரித்து நான்கு நாட்களாகி நாறிப்போன ஒருவனை எந்த மனிதனால் கல்லறையிலிருந்து உயிரோடெழுப்ப முடியும்? அப்படியெல்லாம் செய்தவர் தன்னைத் தான் இரட்சித்துக் கொள்ள முடிந்திருக்காதா என்ன? அவரால் நிச்சயம் முடிந்திருக்கும். ஆனால் அப்படி செய்திருந்தால், அவர் நம்மை இரட்சித்திருக்க முடியாது. அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பை அவர் நிறைவேற்ற வேண்டியவராயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார். ஆனால் ஆதாமின் கீழ்ப்படியாமை... அவன் குறுக்கு வழியில் தர்ஷீசுக்குச் சென்றான். இயேசுவோ தமக்கு ஒரு மணவாட்டியைப் பெற்றுக் கொள்ள, நினிவேக்குச் சென்ற பாதையில் புறஜாதிகளிடம் சென்றார். அவர் அப்படி செய்ததற்காக இன்றிரவு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு நாம் சொந்தமானவர்கள் என்னும் உண்மையை நாம் முகமுகமாய் சந்தித்து, உலகத்தை நம்மிலிருந்து நாம் அகற்ற வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆமென்! 51ஒவ்வொரு மனிதனும் அந்த உண்மையை முகமுகமாய் சந்திக்க வேண்டிய பொறுப்பை தேவனுக்கு முன்பாக பெற்றிருக்கிறான். உதாரணமாக நாம் நோவாவை எடுத்துக் கொள்வோம். அவன்... நோவா, மோசே, எலியா, மற்றும் வெவ்வேறு காலத்திலிருந்த ஏனையோர் அந்த பொறுப்பை வகிக்க வேண்டியவர்களாயிருந்தனர். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் அந்தந்த நேரத்தில் அனுப்பப்பட்டனர். விஞ்ஞான காலத்தில் வாழ்ந்த நோவா, எவ்வாறு விஞ்ஞான ஆதாரமில்லாத ஒன்றைப் பெற்று, அதை முகமுகமாய் சந்திக்க வேண்டியதாயிருந்தது என்பதைப் பாருங்கள். அது விஞ்ஞான ஆதாரம் இல்லாமல் இருந்தது. பாருங்கள்? வானத்திலிருந்து மழை பெய்யப் போகின்றது என்று அவன் கூறினான். அவர்கள்... அதற்கு முன்பு வானத்திலிருந்து ஒரு துளி மழை கூட பெய்யவில்லை. இப்பொழுது அவன் அதை சந்திக்க வேண்டியதாயிருந்தது. மழை பெய்யப் போகிறதென்று தேவன் கூறினார். 52அதன் பிறகு அவன்... கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும், ''நீங்கள், அதை நான் விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லி விட்டு, அதற்கேற்றவாறு கிரியை செய்யாவிட்டால்... இந்த செய்தியைப் போன்று நீங்கள், ''இச்செய்தியை விசுவாசிக்கிறேன்'' என்று கூறிவிட்டு, அதன்படி நடக்கவில்லையென்றால், அதனால் என்ன பயன்? பாருங்கள்? நோவா தான் கூறினதை உறுதிப்படுத்த தன் சுத்தியலுடன் சென்று வேலை செய்து பேழையை உண்டாக்கினான். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும், நாமும் வேலை செய்து, நமது விசுவாசத்தை நமது கிரியைகளினால் நிரூபிக்க வேண்டும். நமது கிரியைகளே நமது விசுவாசத்தை நிரூபிக்கின்றன. மோசே அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. எலியா அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தன் காலத்தில் எழுந்து நின்று இந்த பொறுப்புகளை வகிக்க வேண்டியதாயிருந்தது. அவர்களில் அநேகர் யோனாவைப் போல் நடந்து கொள்ளவில்லை. யோனா ஓடிப் போனான், அவர்கள் ஓடிப் போகவில்லை. 53கவனியுங்கள்! அதற்கு விரோதமாகப் பிரசங்கி. ஓ, என்னே! அதுதான்; அது தான் இன்றைய பொருள். அதற்கு விரோதமாகப் பிரசங்கி, அதுவே அவன் சோதிக்கப்படுதலின் கட்டம், அவன் அங்கு சென்று அங்குள்ள மக்களிடம், ''உங்களெல்லாரையும் நான் சேர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். நான் என்ன செய்யப் போகின்றேன் என்று உங்களிடம் கூறப் போகின்றேன். நான் ஒரு சிறு கருத்தை வைத்திருக்கிறேன். அதை நான் உங்களிடம் கூறலாமென்று நினைக்கிறேன். உங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, இதை, அதை, மற்றதை செய்யலாம் என்றிருக்கிறேன்'' என்று கூறலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் அவன் அதற்கு விரோதமாகப் பிரசங்கிக்க வேண்டும்! நீங்கள் ஏதாவது ஒன்றிற்கு விரோதமாக பிரசங்கிக்கும் போது... அங்கிருந்த எல்லாவற்றிற்கும் விரோதமாக அவன் பிரசங்கிக்க வேண்டியதாயிருந்தது. அவன் நகரத்துக்கு விரோதமாகவும், அவர்களுடைய கிரியைகளுக்கு விரோதமாகவும், அவர்களுடைய சபைக்கு விரோதமாகவும், அவர்களுடைய தீர்க்கதரிசிக்கு விரோதமாகவும், அவர்களுடைய ஊழியர்களுக்கு விரோதமாகவும், அவர்களுடைய போதகர்களுக்கு விரோதமாகவும் அவன் கூக்குரலிட வேண்டியதாயிருந்தது. எல்லாவற்றிற்கும் விரோதமாக. நோவா தன் காலத்திற்கு விரோதமாக, அவன் காலத்திலிருந்த சபைகளுக்கு விரோதமாக பிரசங்கித்தான். (அவன் நிச்சயம் அப்படி செய்தான்) மோசே நிச்சயமாக அவனுடைய காலத்துக்கு விரோதமாக ஜனங்களுக்கும், ஆசாரியர்களுக்கும், மற்றவர்களுக்கும் விரோதமாக பிரசங்கித்தான். அவன் வனாந்தரம் முழுவதிலும் கூக்குரலிட்டான். ஒவ்வொரு சந்திப்பின் போதும் (junction) அவன் கூக்குரலிட்டு, ஜனங்களிடம் முறையிட்டான். எலியா தன் காலத்தில் ஜனங்களால் வெறுக்கப்பட்டவனாயிருந்தான். ஏனெனில் அவன் அந்த காலத்துக்கு விரோதமாக பிரசங்கித்தான். அவன் நிச்சயம் அப்படியிருந்தான்! 54யோவான் ஸ்நானன் தன் காலத்தில் ஜனங்களால் வெறுக்கப்பட்டவனாயிருந்தான். அவன் தன் காலத்துக்கு விரோதமாக பிரசங்கித்தான். அவன் தேசத்தின் ராஜாவிடம்... அந்த ராஜா தன் சகோதரனின் மனைவியை மணந்து கொண்டான். ஒரு நாள் காலையில் அவன் விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கிக்க வேண்டியதாயிருந்தது. அவன் அதற்கு விரோதமாக பிரசங்கித்தான். அவன் ராஜாவிடம், ''நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல'' என்றான். (மத். 14:4). அது அவன் தலை வெட்டப்பட காரணமாயிருந்தது. ஆனால் அவன் அதற்கு விரோதமாக பிரசங்கித்து, அவனுடைய கடமையில் உறுதியாய் நின்றான். அவன் தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் ஏறிச் செல்லவில்லை. அவன், ''ஏரோதே, உமது செயலை நான் ஆமோதிக்கிறேன். அதனால் பரவாயில்லை. அவள் நல்லவள் என்று நீர் கருதி, அவள் உமக்கு உகந்த மனைவியாயிருப்பாள் என்று நீர் நினைத்தால், அதை செய்யும்'' என்று கூறவில்லை. ஓ, இரக்கம்! அவை உணவு தட்டுகளைத் துடைக்கும் கந்தை துணிகள்? பார்த்தீர்களா? ஒவ்வொரு சிறு காரியமும்... அவை அழுக்கு தட்டுகளைத் துடைக்கும் கந்தைத் துணிகளேயன்றி வேறல்ல. 55ஆனால் கவனியுங்கள்! யோவான் ஸ்நானன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் அதற்கு எதிராயிருந்தான். அவன், ''நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல'' என்றான், ஆம், ஐயா! அவன் அதற்கு விரோதமாக நின்றான். அவர்கள் ஓடிப்போகவில்லை. யோவான் ஸ்நானன் ஓடிப்போகவில்லை. அவர்கள் நின்று உண்மையை சந்தித்தனர். ஒரு முறை மோசே யோனாவைப் போல் ஓடி விட முயன்றான், ஆனால் தேவன் அவனை மறுபடியும் கொண்டுவந்தார். அவர்கள் அநேகர் அதை விட்டு விலகிச் செல்ல முயன்றனர். அவர்கள் முயன்றபோது... கவனியுங்கள், தேவன் உங்களை அழைத்து, தேவன் செய்தியில் இருக்கிறார் என்ற உறுதியை நீங்கள் பெற்றிருப்பீர்களானால், எதுவும் உங்களை அதனின்று விலகச் செய்யமுடியாது. அது யோவானை விலகச் செய்யவில்லை. ஆம் ஐயா! 56முன் காலத்து ஆமோஸ், ''சிங்கம் கெர்ச்சிக்கிறது; யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார்; யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?'' என்று கூக்குரலிட்டான் (ஆமோஸ் 3:8). தேவன் பேசி, ஒரு குறிப்பிட்ட காரியம் நிகழும் என்று கூறியிருப்பாரானால், அது நிச்சயம் நிறைவேறும்... சிங்கம் கெர்ச்சிக்கும்போது, எல்லோரும் பயப்படுகின்றனர். ஆம், ஐயா! காட்டில் சிங்கம் கெர்ச்சிப்பதை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருந்தால்! கூடுகளில் அடைக்கப்பட்டுள்ள சிங்கங்கள் சாதுவானவை. அவை 'மியாவ்' என்று சத்தமிடுகின்றன. ஆனால் காட்டிலுள்ள சிங்கம் கெர்ச்சிப்பதை நீங்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டும்! ஐந்நூறு கெஜம் தூரத்திலுள்ள மலையிலிருந்து கற்கள் பெயர்ந்து விழும். அதன் நுரையீரல்களிலிருந்து எப்படி இவ்வளவு பெரிய கர்ச்சனை வருகிறதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒன்றை நான் வேறெங்கும் கேட்டதேயில்லை. அதன் நுரையீரல்களிலிருந்து அந்த பெரிய கர்ச்சனை புறப்பட்டு வரும்போது: பீரங்கி வெடிக்கும் சத்தம் போன்றிருக்கும். அதை கேட்டு யார் பயப்படாதிருப்பான்? நீங்கள் சிங்கத்தினால் கொல்லப்பட நேர்ந்தால், உங்களுக்கு வலியே தெரியாது என்று அவர்கள் கூறுகின்றனர். உங்களை அணுகுவதற்கு முன்பு, அது பயத்தினாலேயே உங்களைக் கொன்றுவிடுகின்றது. பாருங்கள், நீங்கள் அதை அறிவதேயில்லை. அதன் பயங்கரமான கர்ச்சனையினால், அது உங்களை பயமுறுத்தி, ஒரு நொடிப்பொழுதில் உங்கள் மேல் பாய்ந்துவிடுகின்றது. 57ஆமோஸ், சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார்; யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?'' என்றான். தேவன் ஒன்றைச் செய்வதை நீங்கள் காணும்போது... ''நான் தீர்க்கதரிசியல்ல'' என்று நீங்கள் கூறலாம்... ''நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல. கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?'' என்று ஆமோஸ் கூறுகின்றான். நான் தீர்க்கதரிசியாயிராமல் இருக்கலாம்; நான் இது அது மற்றதாக இராமல் இருக்கலாம். ஆனால் தேவன் ஒன்றைச் செய்வதை நான் கண்டு, அது தேவனுடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளதை நான் காணும் போது. யார் அமைதியாயும் மெளனமாயும் இருக்க முடியும்! நிச்சயம் அவர் அதை நிறைவேற்றிவிட்டார்... நாம் தர்ஷீசுக்குச் சென்று கோட்பாடுகளின் பின்னாலும் ஐக்கியங்களின் பின்னாலும் ஒளிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஐக்கியங்களில் நாம் கலந்து கொள்ள விரும்புவதில்லை. 58ஆனால் ஆதாமைப் போன்று பலர், அதையே செய்து: ஏதாவது ஒரு வழியில் அதற்கு பதிலாக ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதனின்று விலக முயல்கின்றனர். அது தவறென்றும் அறிந்தும் கூட, தேவனை முகமுகமாய் சந்திக்க வேறொன்றை அதற்கு பதிலாக ஏற்படுத்திக் கொண்டு, அவனுடைய மனைவியுடன் கூட சேர்ந்து கொண்டு, தேவன் எதை செய்யக் கூடாதென்று கூறினாரோ அதை அப்படியே செய்த ஆதாமைப் போன்றிருக்கின்றனர். தேவன் அப்படி சொல்லியிருந்தும், ஆதாம் அதை செய்தான். அப்பொழுது அவன் நிர்வாணியென்பதை உணர்ந்தான். ஏதேன் தோட்டத்தில் அவனும் அவளும் இருவரும். அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அப்பொழுது நன்மை தீமை என்னவென்பதை அவர்கள் அறிந்தனர். அவன் தன்னை போர்த்திக் கொள்ள பதிலுக்கு ஒன்றை கண்டு பிடிக்க முயன்றான். இன்றைக்கு நாம் அதையே செய்கின்றோம். நான் சொல்லுகிறேன், அது இங்கிருந்திருக்குமானால், இருக்குமானால், இருக்குமானால், இருக்குமானால்'' என்று சாக்கு போக்கு சொல்லுகிறோம். அது தான் பாருங்கள், ஆனால் அதை நீங்கள் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கின்றீர்கள். அது சரியாயிருக்க வேண்டும், அல்லது தவறாயிருக்க வேண்டும். அது சரியாயிருந்தால், அதில் நிலை நிற்போம். தவறாயிருக்குமானால், அதைவிட்டு விலகுவோம். அவ்வளவு தான். எது சரியென்று கண்டு பிடியுங்கள். இன்னும் தாமதிக்க வேண்டாம். எது உண்மையென்றும் சரியென்றும் நாம் கண்டு பிடித்து அதில் நிலைநிற்போம். அது உண்மையென்று நமக்குத் தெரியும். 59இன்றைக்கு நாம் பார்க்கிறோம், நமது ஜனங்கள்... சபைகளிலிருந்து எல்லா உத்தமமும் (sincerity) எடுபட்டுவிட்டது போல் தோன்றுகின்றது. நான்... அங்கு... நாங்கள் இச்சபைக்கு வரும் ஒரு விலையேறப் பெற்ற சகோதரியின் வீட்டில் தங்கியிருக்கிறோம். அவள் ஒருக்கால் இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கலாம். அவள் வீட்டை வாடகைக்கு விடுகின்றாள். அவள் மிகவும் இனிமையாக அந்த இடத்தை எங்களுக்குத் தந்தாள். அவள் பெயரை நான் கூறுவேன்; ஆனால் அவள் அதை விரும்பமாட்டாள். அவள் எங்களிடம் மிக இனிமையாக நடந்து கொள்கிறாள். அவள் பெயரை வெளிப்படையாகக் கூற நான் விரும்பவில்லை. அவள் மிக, மிக அருமையான ஸ்திரீ. அந்த வீட்டில் ஒரு தொலைக் காட்சி பெட்டி உள்ளது. என் குடும்பம் மிகவும் பெரியது, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் நிறைய படுக்கைகள் வைத்துள்ளனர். அவை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் உள்ளே செல்லும் போதும், வெளியே வரும்போதும், இதன் வழியாக கடந்து செல்ல வேண்டும். 60அங்கு ஒரு தொலைக்காட்சிபெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் பிள்ளைகள் தொலைக்காட்சியில் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்படும் நிகழ்ச்சியை பார்த்தனர். கிறிஸ்தவ மார்க்கம் என்னவென்று அறிந்து கொள்ள, உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் வேறெங்காகிலும் இராமற்போயிருந்தால், இதைப் பார்த்து நீங்கள் வெட்கமடைந்திருப்பீர்கள். உத்தமம் அனைத்தும், அதை விட்டுப்போய்விட்டது போல் தோன்றினது. அவர்கள் அங்கு நின்று கொண்டு தங்கள் கைமுட்டை மடக்கி ஒருவரோடொருவர் குத்து சண்டையிட்டு, கிறிஸ்தவ பாடல்களைப் பாடி, ஒரு மாலுமியும் கூட கூறாத அவலட்சணமான நகைச்சுவைத் துணுக்குகளைக் கூறுவதைப் பார்க்க பயங்கரமாயுள்ளது. கிறிஸ்தவ மார்க்கம் தன் பரிசுத்தத்தை இழந்துவிட்டது போல் காணப்படுகின்றது. 61நான் சபைக்குச் சென்றால், அங்குள்ள போதகர் நீச்சல் போட்டி இருக்குமென்று அறிவிக்கிறார். ஸ்திரீகள் அனைவரும் நீச்சல் உடைகளுடன் அங்கு செல்கின்றனர். இந்த பெண்கள் கலந்து கொள்ளும் நீச்சல் போட்டி ஒன்றை அவர்கள் நடத்துகின்றனர். அதன் பிறகு அவர்கள் ஒரு விருந்து வைப்பார்கள். அவர்கள் கோழிகளை நிறைய வறுத்துத் தின்று, சீட்டு விளையாடி, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். என்னைப் பொறுத்த வரையில், அது கிறிஸ்தவ மார்க்கத்திலிருந்து உத்தமத்தை எடுத்துவிடுகின்றது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். 62இங்கு வரும்போது... நான் கண்டேன்... நாம் காண்கிறோம். அந்த உஷ்ணமான தேசத்திலுள்ளவர்களைக் காட்டிலும் இக்குளிர் தேசத்திலுள்ள நமது சகோதரிகள் அதிகம் பேர் குட்டை கால் சட்டை அணிந்துள்ளதை நாம் காண்கிறோம். பாருங்கள்? அது உண்மை. உண்மையில் உஷ்ணமாயுள்ள அந்த இடத்தில் அதிகம் பேர் குட்டை கால் சட்டை அணிவதில்லை. ஆனால் குளிராயுள்ள இங்கோ அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். பாருங்கள், அது... பிசாசு அவ்விதம் செய்யத் தூண்டுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. மனிதன் தனது செளகரியத்திற்காக அவ்வாறு அணிந்தால், அது வேறு காரியம். ஒரு மனிதன் குட்டை கால் சட்டை அணிந்தாலே, அது அருவருப்பாயுள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணின் உடல் புனிதமானது. அவள் அதை பாதுகாப்பாக வைக்கவேண்டும். 63இன்று நீங்கள் ஜனங்களை கவனிப்பீர்களானால்... இரு ஆவிகள் உள்ளன. ஒன்று பரிசுத்த ஆவி, மற்றது பரிசுத்தமில்லாத ஆவி. ஜனங்கள் இவ்விரு ஆவிகளில் ஒன்றினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டுமே பக்தி வாய்ந்தது. அது தான் வினோதமானது. இரண்டுமே பக்தி வாய்ந்தது. ஏசாவும், யாக்கோபும்; காயீனும், ஆபேலும்; யூதாஸும், இயேசுவும்; இவர்கள் இருவருமே பக்தியுள்ளவர்களாயிருந்தது போல... இன்று இருசாராரும் பக்தியுள்ளவர்களாயிருப்பதை நாம் காண்கிறோம். பாருங்கள், அது அதே ஆவி. ஜனங்கள் மரிக்கின்றனர். ஆனால் ஆவி மரிப்பதில்லை. அது தொடர்ந்து செல்கின்றது. இருவருமே பக்தி வாய்ந்தவர்கள், ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர் வாழவேண்டிய பிரகாரம் தேவபக்தியுள்ளவராயும் நேர்மையாகவும் வாழ்கின்றார். அப்படிப்பட்டவர்கள் உங்களை ஒரு காசுக்கும் கூட ஏமாற்றாமல், நேர்மையாக உங்களுக்கு உதவி செய்து, உங்களிடம் நல்லவர்களாயிருப்பார்கள். மற்றைய சாராரோ அதற்கு மாறாக இருப்பார்கள். ஆயினும் இரண்டுமே பக்தியுள்ள ஆவிகள். இவ்விரண்டில் ஒன்று பாிசுத்த ஆவி, மற்றது பரிசுத்தமில்லாத ஆவி. நீங்கள் கவனிப்பீர்களானால்... அவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களென்று உரிமை பாராட்டினாலும், அவர்கள் உங்களைக் கேலி செய்து, உங்களை உருளும் பரிசுத்தர் என்றழைப்பார்கள். அவர்களால் முடிந்த அனைத்தும் செய்வார்கள். 64அவர்கள் என்றென்றும் மாறாத தேவனுடைய வார்த்தையை, ''அது எழுதப்படவேயில்லை என்பது போல், அசட்டை செய்வார்கள். அவர்கள் இங்கு பாருங்கள், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன்'' என்று கூறிக் கொண்டு, கையில் சுருட்டை வைத்துக் கொண்டு புகை பிடித்துக் கொண்டிருப்பார்கள். ''ஆம், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் சிறிது மது அருந்துவது தவறென்று நான் நினைக்கவில்லை'' என்பார்கள். பாருங்கள்? நான் நினைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதைக் கவனித்தீர்களா? ஆனால் தேவனோ வித்தியாசமாக நினைக்கிறார். அவருடைய வார்த்தையின் அடிப்படையில், பாருங்கள்? அவர்கள் அதன் மேல் துப்புகின்றனர். அது முற்றிலும் உண்மை. 65தாவீது தன் சிங்காசனத்தை விட்டு புறம்பாக்கப்பட்ட போது, அங்கு ஊர்ந்து வந்த அந்த முடவன் செய்தது போல. தாவீது அழுது கொண்டே ஒலிவ மலையின் மேல் ஏறிச் சென்றான். அப்பொழுது இந்த முடவன் அங்கு ஊர்ந்து சென்று அவன் மேல் துப்பினான். அப்பொழுது பாதுகாப்பாளன், ''என் ராஜாவின் மேல் துப்பின இந்த நாயின் தலையை நான் வாங்கிப் போடட்டும்'' என்றான். “அப்பொழுது தாவீது, அவனை விட்டு விடு'' என்றான். பாருங்கள், அவர்கள் அவன் மேல் துப்பினார்கள். எண்ணூறு ஆண்டுகள் கழித்து அவர்கள் அவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேலும் துப்பினார்கள். இன்று அவர்கள் மறுபடியும் அவர் மேல் துப்புகின்றனர்... மிகவும் அவபக்தி கொண்டவர்கள், சிரத்தையற்றவர்கள், தங்கள் தலைகனை திருப்பி விலகி சென்று, உங்கள் முகத்தை நோக்கி சிரிக்கின்றனர். ஏன் அவ்வாறு செய்கின்றனர்? அவர்கள் தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் உள்ளனர். அது முற்றிலும் உண்மை. தேவன் நிமித்தம் நீங்கள் பொல்லாங்கானவைகளுக்கு விரோதமாய் கூக்குரலிடுகின்றீர்கள், பாவத்துக்கு விரோதமாய் கூக்குரலிடுகின்றீர்கள். தவறுகளுக்கு விரோதமாய் கூக்குரலிடுகின்றீர்கள். (ஞாபகம் கொள்ளுங்கள், இப்பொழுது... என்ன நேரம் தெரியுமா... இங்கு நேரத்தில் இரண்டு மணி நேரம் வித்தியாசம். டூசானில் இப்பொழுது 7.00 மணி அடித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். எனக்கு இங்கில்லாதது போன்று உணர்ச்சி தோன்றுகின்றது.) 66இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இதற்கு நாம் உத்தரவு சொல்ல வேண்டும். கிறிஸ்துவின் மேல் துப்பினவர்கள் அதற்கு உத்தரவு சொல்ல வேண்டியவர்களாயிருந்தனர், நாடு கடத்தப்பட்ட தாவீது திரும்பி வந்தபோது - அவன் பயந்து ஓடிப் போனான்; அவன் திரும்பி வந்த போது, இவன் முகங்குப்புற விழுந்து இரக்கத்துக்காக கெஞ்சினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாவீது வெளியே சென்ற போது, அவன் தாவீதின் மேல் துப்பினான், ஆனால் இப்பொழுதோ தாவீதின் பாதங்களை அவன் கண்ணீரினால் கழுவ ஆயத்தமாயிருந்தான். அவன் திரும்பி வந்த போது. இயேசுவைக் குத்தினவர்கள் ஒரு நாள் அதைக் காண்பார்கள், இன்றைக்கு அவரைக் குத்துபவர்களும் அதை காண்பார்கள். அவர்கள்... என்றாவது ஒரு நாள் அது திரும்ப வரும். வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்தை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் நாம் கைக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் - ஒவ்வொரு வார்த்தையும். 67அவருடைய பிரசன்னம் இங்குள்ளதென்று நாமறிவோம். அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதை நாம் பெற்றிருக்கிறோம். வரப்போகும் வாரத்திலும் அது நமது மத்தியில் உறுதிப்பட்டு, வியாதியஸ்தர்கள் சுகமடைந்து பெரிய சம்பவங்கள் நிகழுமென்று நாம் நம்பியிருக்கிறோம். நமக்கு புகழ் வாய்ந்த கருத்துக்கள் தேவையில்லை; நமக்கு சத்தியம் தான் அவசியம்... தேவன் சத்தியம் என்று கூறினதை மாத்திரமேயன்றி வேறொன்றையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்பதை நிச்சயமாய் அறியுங்கள். அது இங்கு உங்களைப் பிடிக்கவில்லையென்றால், நியாயத்தீர்ப்பில் உங்களைப் பிடிக்கும். எனவே நீங்கள்... அது எங்காவது உங்கனைப் பிடிக்கும். அது உண்மை! ஆனால் நீங்கள் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக, யோனாவைப் போல் அழைக்கப்பட்டிருந்தால், தேவன் உங்கள் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டார். தர்ஷீசுக்குப் போகும் கப்பலிலிருந்து இறங்கிவிடுங்கள். இந்த ஜீவனுக்காக தேவன் உங்களை முன்குறித்திருக்கிறார். ஆம், ஐயா! நீங்கள் உண்மையுள்ள, அழைக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையாக இருப்பீர்களானால், கிறிஸ்துவினிடம் வாருங்கள். அவருடைய பரிபூரணத்துக்குள் வாருங்கள். நீங்கள் எங்கு செல்ல உங்கள் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது? நினிவேக்கு, தர்ஷீசுக்கு அல்ல. நீங்கள் முன் குறிக்கப்பட்டிருக்கின்றீர்கள் உங்கள் கப்பல்... இப்பொழுது ஒரு கப்பல் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது, எனவே நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, அதில் ஏறுவதே. நீங்கள் தேவனைப் போலிருந்தால்... அதுவரைக்கும் உங்களுக்கு சமாதானமிராது. 68நான் சற்று முன்பு கூறின என் மருமகனைப் போல். அவன் கடந்த பத்து ஆண்டுகளாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறான். அவன் கத்தோலிக்க சபைக்குச் சென்று, அங்கு பரிசுத்த குருவானவர் கூறுவதை ஏற்றுக் கொள்கிறான், பிறகு வேறொருவர் கூறுவதை, பிறகு வேறொருவர் கூறுவதை. அதனால் என்ன பயன்? பாருங்கள்; அவன் இன்னும் பசி தாகம் கொண்டவனாயிருக்கிறான். நான் அவனிடம், ''மகனே, உன் இடம் அங்குள்ள பீடத்தண்டையில்'' என்றேன். பாருங்கள்? அதிலிருந்து தப்ப வழியேயில்லை. தேவன் உங்களைப் பின்தொடருவாரானால், நீங்கள் மற்றவை அனைத்தையும் விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். அவ்வளவு தான். 69தேவன் அந்த கப்பலில் இருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் அந்த புயலில் இருந்தார், தேவன் அந்த மீனில் இருந்தார். யோனா திரும்பின இடத்தில் எல்லாம் தேவன் இருந்தார். பாருங்கள்? தேவன் அங்கிருந்தார். அவர் உங்களைச் சுற்றிக் கொண்டேயிருப்பார். ஆகவே நாம் இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்? நாம் உடனடியாக இந்த எழுப்புதலைத் தொடங்குவோம். அது உண்மை. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் ஒரு மணவாட்டியைப் பெற்றுக் கொள்வார். அது ஆயத்தமாயுள்ளது. நமக்கு தர்ஷீசுக்குப் போகும் கப்பல்கள் எதுவும் வேண்டாம். நாம் நினிவேக்குச் செல்கிறோம். நாம் மகிமைக்குச் செல்கிறோம். ஆமென்! அது உண்மை. தேவன் ஆசீர்வதிக்கப் போகும் இடத்திற்கு நாம் செல்கிறோம். அதை தான் நாம் செய்ய விரும்புகிறோம். 70தேவன் நம்மை தமது மகிமையின் கதிர்களால் பக்குவப்படுத்தி, நம்மை உலர்த்தி, முதிர்வடையச் செய்து, அவருடைய நன்மையை நமக்களித்து, நாம் தத்ரூபமாக (பாருங்கள்?) இயேசு ஜீவிக்கிறார் என்பதை மற்றவர்களுக்குக் காண்பிக்கும் நிலையையடையும் வரைக்கும், தேவனுடைய சமூகத்தில் நமது இருதயங்களுடன், நமது கரங்களுடன் அவ்வளவாக அல்ல, நமது இருதயங்களுடன் நம்மை கிடத்திக் கொள்வோமாக. ஓ, என்னே! நாம் அப்படியிருக்க விரும்புகிறோம். 71ஞாபகம் கொள்ளுங்கள், யோனா சென்றவிடத்தில் தேவன் அந்த கப்பலில் இருந்தார். தேவன் அந்த புயல் காற்றில் இருந்தார், தேவன் அந்த மீனில் இருந்தார். அவருடைய பரிபூரண சித்தம் செய்யப்படும் வரைக்கும், அவர் யோனாவுடன் கூட கடைசி மட்டும் இருந்தார். அது உண்மை! அவ்வாறே அவர் உன்னையும் பின் தொடருவாரானால், அவரை நீ இங்கும் அங்கும் ஏமாற்றலாம்; ஆனால் நீ அவருக்காக செய்ய வேண்டுமென்று நினைத்து முதலில் தொடங்கின காரியத்தை நீ திரும்பிவந்து செய்து முடிக்கும் வரைக்கும், நீ நிம்மதியற்றவனாயிருப்பாய். பாருங்கள்? தேவனுடைய சமூகத்தை விட்டு விலகி ஓடிவிடாதே. அதை முகமுகமாய் சந்திப்பாயாக. அது சத்தியமென்று நீ விசுவாசித்தால்... அது சத்தியமாயிருக்குமானால், அதற்காக வாழவும், அதற்காக மரிக்கவும் அது தகுதியுள்ளதாயிருக்கும். அது சத்தியமென்று அவர் எப்பொழுதாகிலும் உனக்கு உறுதிப்படுத்தியிருந்தால், அதிலிருந்து விலகி நாம் எங்கேயும் ஓடிவிட முடியாது. நாம் எங்கு சென்றாலும் அவர் அங்கிருப்பார். நீங்கள் அப்படி செய்ய முடியாது. 72அந்த செய்தியை அளிப்பதற்கென தேவன் ஒரு தீர்க்கதரிசியை அருளி அவனை அதற்கென்று நியமித்தார். அவர் வேறொரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம். ஆனால் அவர் யோனாவை அதற்கென்று நியமித்தார். எலியா அதை செய்திருக்க முடியாது. எரேமியா அதை செய்திருக்க முடியாது, மோசே அதை செய்திருக்க முடியாது. யோனா மாத்திரமே நினிவேக்கு செல்ல வேண்டியவனாயிருந்தான். அவ்வளவு தான். அவர் அவனை அதற்கென்று நியமித்து, அங்கு போகும்படி அவனுக்குக் கட்டளையிட்டார். அவர், யோனாவே, நினிவேக்குப் போ என்று கட்டளையிட்டால், யோனாவைத் தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாது. தேவன் ஒன்றை உன்னிடம் கூறுவாரானால், நீ அதை செய்தே ஆகவேண்டும். வேறு யாருமே... பாருங்கள், அதை நாம் ஏற்றுக் கொண்டு அங்கு சென்று அதை செய்ய வேண்டும். தேவன் ஒன்றை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவைகளுக்கிடையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம். அங்கு கிடந்து, முதிர்வடைவதற்காக காத்திருக்கும் சபையோருக்கு இன்றிரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அது எப்பொழுதும் போல இப்பொழுதும் உள்ளது என்று என்னால் கூறமுடியும். 73யோவான் 14:12 நிறைவேற வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று நாம் விசுவாசிக்கிறோம். மல்கியா 4 நிறைவேற வேண்டுமென்று நாம் விசுவாசிக்கிறோம். லூக்கா 17:30 நிறைவேற வேண்டுமென்று நாம் விசுவாசிக்கிறோம். இந்த நாளில் நிறைவேறுமென்று அவர் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று நாம் விசுவாசிக்கிறோம். அவை இப்பொழுது நிறைவேறுவதை நாம் காண்கிறோமென்று விசுவாசிக்கிறோம். அது முற்றிலும் உண்மை! ஓடிப் போகாதீர்கள். அவருடைய சமூகத்தை விட்டு விலகிப் போகாதீர்கள். அவருடைய சமூகத்துக்குள் வாருங்கள். அது உண்மை! அதை செய்ய நீங்கள் விருப்பங் கொண்டிருக்கிறீர்கள் என்று நானறிவேன். ஏனெனில் டெக்ஸாஸ், லூயிசியானா, இன்னும் மற்றவிடங்களில் அளிக்கப்பட்ட லைசென்ஸுகளை இங்கு காண்கிறேன். அதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம், அவருடைய சமூகத்தை விட்டுவிலகி ஓடிவிடுவதற்கல்ல, அவருடைய சமூகத்துக்குள் வருவதற்கே. திரும்பி வாருங்கள்... (ஓலி நாடாவில் காலி இடம்)... நீங்கள் யோனாவாக இருந்து, எந்த வழியாக செல்லவேண்டும், என்ன செய்ய வேண்டுமென்று வியந்து கொண்டிருந்தால், வாருங்கள், இன்றிரவு எங்களுடன் கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். நாங்கள் நினிவேக்கு விரோதமாக கூக்குரலிட அங்கு செல்கிறோம். மற்றவர்கள் விரும்பினால் தர்ஷீசுக்குப் போகட்டும். எங்களுக்கு தேவனுக்கு முன்பாக ஒரு கடமையுண்டு. அது தான் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகிய அந்த செய்தி. 74எனவே வரப் போகும் வாரத்திற்கென முன்னுரையாக, நான் எதைக் குறித்து கூக்குரலிடுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். சகோதரரே, ஒரு செய்திக்கு நான் முழுவதும் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். இங்கு அமர்ந்துள்ள போதகர்களே, உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக நான் இங்கில்லை. விவாகமும் விவாகரத்தும் வழக்குகளில் சிக்கியுள்ள ஸ்திரீகளே, மனிதர்களே, இன்றிரவு இதை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று இவையனைத்தையும் கூறினேன். நான் தேவனுக்கு மாத்திரமே பொறுப்புள்ளவன். உங்களிடம் சத்தியத்தை எடுத்துரைக்கும் பொறுப்பும் எனக்குண்டு. தேவன் எனக்கு சத்தியத்தை அறிவிப்பாரானால், நான் உங்களிடம் சத்தியத்தை தவிர வேறொன்றையும் எடுத்துரைக்க மாட்டேன். நான் சத்தியத்தை அறியும் வரைக்கும், உங்களிடம் ஒன்றையும் கூறமாட்டேன். ஆனால் விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தைக் குறித்த உண்மையை தேவன் எனக்குக் காண்பிப்பாரென நம்புகிறேன். அதை உங்களுக்கு எடுத்துரைக்க அவர் அனுமதிப்பாரென்று நம்புகிறேன். 75இந்த வாரம் நான் பேச எத்தனித்துள்ள செய்திகள்: யார் இந்த மெல்கிசேதேக்கு, தேவன் தமது நாமத்தை எங்கு வைக்கத் தெரிந்து கொண்டார், இப்படிப்பட்ட சில செய்திகள். பிறகு பிரசவ வேதனை, அந்த வரிசையில் அளிக்கப்படயிருக்கும் சில செய்திகள் இவை. ஒரு மனிதன் தன் மனைவியை எவ்வாறு பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சில செய்திகளை இந்த வாரம் பிரசங்கிக்கலாமென்றிருக்கிறேன். இங்குள்ள சபையோர், இந்த ஊழியத்தை புரிந்துகொள்ள வேண்டும்... சகோதரரே... உங்களுக்கு... இங்கு வந்துள்ள சிலர் உங்கள் சபைகளுக்குத் திரும்பிச் சென்று, சகோ. பிரான்ஹாம் இப்படி இப்படி கூறினார் எனலாம். சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு அளித்துள்ள செய்திக்கு நான் கடமைபட்டவனாயிருக்கிறேன். இன்றிரவு நான் இங்கு நின்று கொண்டு தேவன் அது உண்மையென்று அறிவார். இந்த நதிக்கரையில்... 1933ம் ஆண்டு இங்குள்ள ஸ்பிரிங் தெருவில் கர்த்தருடைய தூதன் இறங்கி வந்து என்னிடம் கூறினதைக் கண்ட சிலர் இங்கு அமர்ந்திருக்கக் கூடும். நீங்கள் அந்நியராயிருந்தால், ஸ்பிரிங் தெரு முனைக்கு காரோட்டி செல்லுங்கள். அங்கு நதியைக் காண்பீர்கள். அது 1932ல் நடந்தது. அது முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவர் அங்கு அதை கொண்டு வந்தார். அன்று முதல் நாங்கள் இந்த செய்தியை அளித்து வருகிறோம். வியாதியஸ்தர்கள் சுகமடைவதையும், குருடர்கள் பார்வையடைவதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், மரித்தோர் உயிரோடெழுந்து, அது மருத்துவர்களால் ருசுப்படுத்தப்பட்டதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். ஜனங்கள் மரித்து, பின்பு உயிரோடு எழுப்பப்படுதல் போன்றவை. 76ஒரு செய்தி புறப்பட்டுச் செல்லும்போது, அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்கின்றன. அதே சமயத்தில் அது தேவனிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல என்னும் பழமையான கருத்து நிலவி வருவதையும் நாம் காண்கிறோம். தேவன் உங்கள் கவனத்தை ஒன்றினிடம் கவர்வதற்காகவே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார். இயேசு தமது ஊழியத்தை தொடங்கின போது, அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார், மகத்தான அற்புதங்களைச் செய்தார். அவர் எப்பொழுதுமே... அவர்... இயேசு அவ்வாறு செய்தார். மோசேயும், இயேசுவும், மற்றவர்களும் அவ்வாறு செய்தனர். இயேசு இவ்வுலகில் இருந்தபோது அவ்வாறு செய்தார். இன்றும் அவ்வாறு செய்து வருகிறார். அவர் ஒரு எழுப்புதல் கூட்டத்தை இவ்வுலகில் தொடங்கும் போது, மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் கொண்ட ஒரு அசைவை ஏற்படுத்துகிறார். அப்பொழுது உடனே அந்த பழைய போதகம் தலையெடுத்து, ''ஏதோ புதிதாக வந்துள்ளது! எங்கோ தவறுள்ளது'' என்கின்றது. 77இயேசு இவ்வுலகில் வந்தபோது... ''ஓ, அவர் அருமையான ரபி'' என்றனர். அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்திக் கொண்டிருந்த போது, அவர் எந்த பிரசங்க பீடத்திலும் சென்று பிரசங்கம் செய்யலாம்... ஓ, அவர் தங்களிடம் வர வேண்டுமென்று விரும்பினர். ஆனால் ஒரு நாள் அவர், ''நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று கூறின போது, சகோதரனே, அதற்கு பிறகு அவர் அவ்வளவு புகழ் பெற்றவராக இல்லை. அவர், ''நீங்கள் என் மாம்சத்தைப் புசியாமலும் என் இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று கூறின அன்று முதற்கு அவர் புகழ் வாய்ந்தவராக காணப்படவில்லை. அவர்கள், ''இந்த மனிதன் இரத்தம் குடிக்கும் பிசாசு (vampire). இந்த மனிதன் பெயல்செபூல். அப்படித்தான் இவனுடைய செய்கைகள் காணப்படுகின்றன. இவன் குறிசொல்பவன்'' என்றனர். அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்ட காரணத்தால், அவர்கள் அவரை பெயல்செபூல் என்றழைத்தனர். ஆனால் அவரோ அந்த நேரத்துக்காக தேவனுடைய வார்த்தை வெளிப்படுபவராக இருந்தார். அவர் தன் கடமையை நிறைவேற்ற வேண்டியவராக இருந்தார். அவர், ''நான் என் பிதாவுக்குப் பிரியமானவைகளையே எப்பொழுதும் செய்து வருகிறேன்'' என்றார். நாமும் அவ்வாறே பிதாவுக்குப் பிரியாமானவைகளைச் செய்ய தேவன் நமக்குதவி செய்வாராக. நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன். இந்த செய்திகளின் விஷயத்தில் நீங்கள் என்னுடன் இணங்காமல் போனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள். எனக்கு ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்காவது மரியாதை கொடுங்கள். நான் தர்ஷீசுக்குப் போகவில்லை. நான் நினிவேக்குப் போகும் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். நான் கூக்குரலிட வேண்டும். கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. 78சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். இப்பொழுது ஏறக்குறைய 9:30 ஆகிவிட்டது. உங்களை இன்னும் அதிக நேரம் வைத்திருக்க நான் விரும்பவில்லை. ஆனால், என்னால் கூடுமானால், இதை மாத்திரம் இன்றிரவு கண்டு கொள்ள விரும்புகிறேன். இங்கு யாராகிலும் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டிய ஸ்தானத்தில் இராமல், ஆனால் அங்கு இருக்க வேண்டுமென்று விரும்பினால் உங்கள் கரங்களையுயர்த்தி, ''சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூறுவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உயர்த்தப்பட்ட கரங்களைப் பாருங்கள்! சகோ. பிரான்ஹாமே, ''நான் தேவனிடம் நெருங்க வேண்டுமென்பதற்காக இங்கிருக்கிறேன்'' உங்கள் தலை உயர்த்தப்பட்டால், என் கரங்களும் உயர்த்தப்படும். அதற்காகவே நான் இங்கிருக்கிறேன். உங்களைப் போலவே, நானும் பசியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் ஓ, அன்றொரு நாள் மிகவும் கம்பீரமான செயல் ஒன்று நிகழ்ந்தது. இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். அந்த தெளிந்த புத்தியை தேவன் உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்குமானால், அந்த கேள்விக்கு பதில் எங்காவது இருக்க வேண்டும். இந்த சமயத்தில் அந்த கேள்விக்கு நீங்கள் பதில் காணும்படி தேவன் உதவி செய்வாராக என்பதே என் ஜெபமாயுள்ளது. நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், தேவன் உங்களை சுகப்படுத்துவாராக. நாங்கள் ஒவ்வொரு இரவும் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப் போகிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகின்றோம். உங்களுக்குதவி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்யப் போகின்றோம். எங்களுக்குதவி செய்ய, உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்யுங்கள். தேவன் நமக்கு ஒரு மகத்தான கூட்டத்தை அளிக்கப் போகின்றார் என்னும் விசுவாசத்துடன் நாம் ஒருமித்து செயல்படுவோம். 79இப்பொழுது, பிதாவாகிய தேவனே, விட்டுவிட்டு சொல்லப்பட்ட இந்த சில சொற்கள், ஆனால் கர்த்தாவே, இவை உம்முடைய கரங்களில் உள்ளன. அவை கூறப்பட்டுவிட்டன. அவைகளை நான் சந்திக்க வேண்டியவனாயிருக்கிறேன். இந்த வார்த்தைகள் அழிந்து போவதில்லை. அவை பதிவு செய்யப்பட்டு உலகத்தை சுற்றிலும் சென்று கொண்டிருக்கின்றன. கர்த்தாவே, என்றாவது ஒரு நாள் அதை நான் முகமுகமாய் சந்திக்க வேண்டும் என்பதை உணருகிறேன். இதை நான் ஆழ்ந்த உத்தமத்துடன் கூறுகின்றேன். அன்புள்ள தேவனே, உமது பிள்ளைகளாகிய இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் இன்றிரவு நான் ஜெபிக்கிறேன். ஓ தேவனே, இந்த வாரம் முடியும் முன்பு, இன்றிரவு அவர்கள் மனதில் பெரிதாக எழுந்துள்ள கேள்விக்கு பதில் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்களாக. பிதாவே, இங்குள்ளவர்களில் சிலர் உம்மை இரட்சகராக அறிந்து கொள்ளாமல் இருக்கலாம், அல்லது பரிசுத்த ஆவியால் நிறையப்படாமல் இருக்கலாம். இன்றிரவு அவர்கள் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே, ''என்னால் யாரையுமே பரிசுத்த ஆவியால் நிறைக்க முடியாது. யாரையும் என்னால் இரட்சிக்க முடியாது. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்'' என்று நீர் கூறினதை மாத்திரம் நான் அவர்களுக்கு எடுத்துரைக்க முடியும். (ஆங்கிலத்தில், ''they shall be filled“ -''அவர்கள் நிறைக்கப்படுவார்கள்' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது. மத். 5: 6 - தமிழாக்கியோன்). தேவனே, அவர்களுடைய இருதயத்தில் இப்படிப்பட்ட ஒரு பசியை நீர் உண்டாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அநேகர் பசியாகத்தான் இருக்க வேண்டும். இல்லாமற் போனால், இவர்கள் மழை பெய்து கொண்டிருக்கும் மலைகளையும், வனாந்தரத்தையும் கடந்து நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து இங்கு வந்து ஒரு பழைய சிறு இடத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்க மாட்டார்கள். ''பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்'' என்று நீர் கூறியுள்ள வசனத்தை நான் மறுபடியும் நினைவு கூருகிறேன், கர்த்தாவே, உமது தெய்வீக மன்னாவினால் எங்களை போஷியும். எங்கள் ஆத்துமாக்களுக்கு தேவையானதை எங்களுக்கு அளிப்பீராக. பிதாவே, உமக்காக நாங்கள் தாகங் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் உமது கரங்களில் இருக்கிறோம். அன்றொரு நாள் அந்த மலையின் மேல் இறங்கி வந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே, இங்குள்ள ஒவ்வொருவருடைய இருதயத்தையும் தமது நன்மையினாலும் இரக்கத்தினாலும் நிரம்பி வழியும்படி செய்து, அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்வாராக. பிதாவே, நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதே எங்கள் அவசியமாயுள்ளது என்பதை நாங்கள் உணருகிறோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலிருந்தால், அதை எப்படி எங்களால் செய்ய முடியும்? எங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இருக்க வேண்டும். தீர்க்கதரிசியாகிய எரேமியா எழுதி வைத்தவைகளை தானியேல் புரிந்து கொண்டதாக கூறினது போன்று, பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்தவைகளை இந்த மணி நேரத்தில் அவர் வெளிப்படுத்தித் தரும் விதமாகவே நாங்கள் புரிந்து கொள்வோம். கர்த்தாவே, உமக்காக நாங்கள் கொண்டுள்ள வாஞ்சையை எங்களுக்கு நிறைவேற்றித் தாரும். பிதாவே, இதை நாங்கள் உமது நாமத்தின் மகிமைக்காக மென்மையாகக் கேட்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 80இப்பொழுது நமது தலைகள் வணங்கியிருக்கும் போது, நமது சகோதரி, ''அவர் எனக்கு கிருபையும், மகிமையும் அளித்து, என்னுடன் வழி நெடுக செல்வார்'' என்னும் பாடலை பியானோவில் இசைத்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் விருப்பங்களை பரலோகப் பிதா அருள வேண்டுமென்று அவரிடம் அமைதியாக ஜெபியுங்கள். அருமையான சகோதரனே, அருமையான சகோதரியே, உங்கள் கரம் உங்களுக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளதோ, அவர் உங்களுக்கு அவ்வளவு அருகாமையில் இருக்கிறார். மற்ற காரியங்களில் நீங்கள் என்னை விசுவாசிக்கின்றீர்கள், இதிலும் நீங்கள் என்னை விசுவாசியுங்கள். உங்கள் தேவைகளையெல்லாம் உங்களுக்களிக்க, அவர் இங்கிருக்கிறார். ஓ, கடந்த சில வாரங்களாக, உங்களைக் காண்பதற்கு நான் பசியும், தாகமும், வீடு திரும்ப வேண்டுமெனும் ஆவலும் கொண்டிருந்தேன். ஆகவே தான் நான், ''பில்லி, வீடு செல்லலாம்'' என்றேன். மேடா, ''பில், குளிர் மிகுந்த அந்த இடத்திற்கு நீங்கள் ஏன் திரும்பச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? அங்கு உங்களுக்கு தொண்டை கரகரப்பு ஏற்படும். அங்கிருந்து நீங்கள் மண்டை சளியுடனும், கரகரப்பான தொண்டையுடனும் எப்பொழுதுமே திரும்பி வருகின்றீர்கள். உங்களால் பேசக்கூட முடிவதில்லை'' என்றாள். நான், ''எனக்குத் தெரியவில்லை'' என்றேன். நான் அவளிடம் கூறினேன். என் நண்பர் சார்லி காக்ஸ் பின்னால் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். நான் அவளிடம், ''அந்த சிறு அணில் அந்த மரத்தின் மேல் ஏறுகின்றது, என்று சார்லி தன் கொச்சை மொழியில் கூறுவதைக் கேட்க வேண்டுமெனும் ஆவல் தோன்றுகிறது'' என்றேன். உங்களுடன் கூட இருப்பதற்கு எனக்கு அதிக விருப்பம். 81என் சகோதரன் பாங்க்ஸ் மிகுந்த நோய்வாய்ப்பட்டார் என்று நானறிவேன். அவரைக் குறித்த ஒரு தரிசனத்தை நான் அண்மையில் கண்டேன். அவர் மல்லாந்து படுத்துக் கொண்டிருந்தார். நம்மை விட்டு எடுபடக்கூடிய நிலையை அவர் அண்மையில் அடைந்தார் என்று அறிவேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் காண்கிறேன்... அன்றொரு இரவு சர்வதேச கிறிஸ்தவ வர்த்தகர் கூட்டத்துக்கு வந்திருந்தேன்; முதியோரான 'தந்தை' ஷகரியான், டிமாஸின் தந்தை, அங்கு உட்கார்ந்து கொண்டு நான் வரும் வரைக்கும் ஆவலாய் பார்த்துக் கொண்டேயிருப்பார். பின்பு புன்னகை புரிந்து, என்னை நோக்கி அவர் மெல்ல கையாட்டுவது வழக்கம். ஆனால் அப்பொழுது அவர் அங்கில்லை. அவர் போய்விட்டார். பின்பு அந்த குடும்பத்தினிடம் 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதுடன் நான் சென்று, அவர்களுடைய மகள் பிளாரன்ஸும் மரிக்கப் போகின்றாள் என்று கூற வேண்டியதாயிருந்தது. அவள் மரிப்பதை ஒரு தரிசனத்தில் நான் கண்டேன். நான் அவர்களிடம், ''ஜெபியுங்கள், ஜெபித்துக் கொண்டேயிருங்கள். ஒரு முறை ஒரு தீர்க்கதரிசி ஒரு ராஜாவிடம் அனுப்பப்பட்டு, அவன் மரித்துப் போவான் என்றும், அவனுடைய வீட்டு காரியங்களை அவன் ஒழுங்கு செய்யும்படி கூறும்படியாகவும் கட்டளையிடப்பட்டடான். அந்த ராஜா ஊக்கமாக ஜெபித்தபோது, கர்த்தர் அவனுடைய ஆயுளை பதினைந்து ஆண்டுகள் கூட்டித் தந்தார்'' என்றேன். நான், ''ஜெபியுங்கள், ஆனால்...'' என்றேன். 82கவனியுங்கள்... நான் திரும்பி வந்தேன்... நான் ஒரு உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தேன். ஒரு மனிதன் என்னிடம் வந்து, ''நீங்கள் பில்லி பிரான்ஹாம் அல்லவா?'' என்றார். நான் ''ஆம்'' என்றேன், ''அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் எனக்கு தொண்டை கரகரப்பு ஏற்படாமலிருக்க என் வழுக்கை மண்டையை மூடுவதற்காக ஒரு டோப்பா அணிந்திருந்தேன். அவர் என்னிடம் வந்து, ''உங்களை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்'' என்றார். நான், ''ஆம். நீங்கள் யார்?'' என்றேன். அவர், ''நான், ஜான் வார்மான்'' என்றார். நான், ''டிப் எப்படியிருக்கிறார்?'' என்று கேட்டேன். அவர், ''பில்லி, அவர் மரித்துவிட்டார்“ என்று விடையளித்தார். 83நான் வரிப்பணம் கட்டிவிட்டு, நீதிமன்றத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு ஸ்திரீ என்னிடம், ''ஜான் மரித்துவிட்டான் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டாள். அவள் ''ஜான்'' என்று கூறவில்லை என்று நினைக்கிறேன். எட் அல்லது வேறெந்த பெயரோ... அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியவில்லை. எனக்கு தர்ம சங்கடமாயிருந்தது. அவளை எனக்குத் தெரியாது. அவள், இருள் சூழ்ந்த ஒரு இரவின் போது, செஸ்ட்நட் தெருவில் ஆற்றில் வெள்ளம் அதிகமாகி கரையிலிருந்த வீடுகளையெல்லாம் அடித்துக் கொண்டு சென்றபோது, உங்கள் உயிரையும் நீங்கள் பொருட்படுத்தாமல், ஒரு வீட்டில் புகுந்து, ஒரு பெண்ணையும் சில குழந்தைகளையும் காப்பாற்றினது ஞாபகமிருக்கிறதா? என்று கேட்டாள். நான், ''அவளா நீ?'' என்றேன். அவள், ''நான் தான் அந்த ஸ்திரீ'' என்றாள். அவள் தன் குழந்தை வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடப் போகிறதே என்று அப்பொழுது கதறினாள். அந்த வரலாறு உங்களுக்குத் தெரியும். அவள், ''என் குழந்தை என்று நான் அழைத்த அவனுக்கு விவாகமாகி ஒரு குடும்பம் இருக்கிறது'' என்றாள். பாருங்கள்? அவளுக்கு வயது சென்று, தலை நரைத்திருந்தது, எனக்கும் அப்படியே, அடுக்கி வைக்கப்பட்டுள்ள சீட்டுகள் ஒவ்வொன்றாக போய்விடுகின்றன. நாம் கூட்டங்கள் வைக்கிறோம். அப்பொழுது ஒருவர் இருப்பதில்லை, வேறொருவர் இருப்பதில்லை, அவர்கள் மரித்துவிடுகின்றனர். அவர்கள் காணாமற் போய்விடுகின்றனர். சகோதரனே, சகோதரியே, நாம் எல்லோரும் ஒரு நாளில் காணாமற் போய்விடுவோம். நாம் கூட வேண்டிய ஒரு ஸ்தலம் உண்டு. நாம் சரியாயிருக்கிறோம் என்று உறுதி கொள்வோமாக. நீங்கள் அப்படி செய்வீர்களா? தேவனைக் குறித்து நாம் கொண்டுள்ள கருத்து வீணாய் போய் விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் நாம் விசுவாசிப்போம். 84பிதாவே, இவர்கள் உம்முடைய கரங்களில் உள்ளனர். கர்த்தாவே, நானும் உமது கரங்களில் இருக்கிறேன். நாளை இரவு முதல் தொடங்கவிருக்கும் கூட்டங்களுக்கு முன்பு ஒரு பிரதிஷ்டைக்காக இங்கு நாங்கள் கூடியுள்ளோம். கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்வீரா? எங்கள் உரையாடல் எப்பொழுதும் உம்மைக் குறித்தே இருப்பதாக. எங்கள் இருதயங்களும் சிந்தனைகளும் எப்பொழுதுமே உம் பேரில் தங்கியிருப்பதாக. எங்களை பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வதாக நீர் வாக்களித்திருக்கிறீர். ''உன் சுய புத்தியின் மேல் சாயாதே'' என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓ, தேவனே, எங்கள் சுயபுத்தி எங்களுக்கு வேண்டாம், உமது ஞானமே எங்களுக்குத் தேவை. ஓ, தேவனே, அதை எங்களுக்குத் தந்தருளும். இந்த ஜனங்கள் ஒரே இருதயமும் ஒரே சிந்தையுமுள்ளவர்களாய் ஆகும் வரைக்கும், எங்கள் ஆத்துமாக்களில் எழுப்புதல் உண்டாகிக் கொண்டிருப்பதாக. பிதாவே, இதை அருளும். நாங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கும் இந்த நேரத்தில், இவைகளை எங்களுக்கு அருளுவீராக. .......................... என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும் சிலுவையில், சிலுவையில் எந்தன் மகிமையாய் எப்பொழுதுமே இரும் (நாம் கரங்களையுயர்த்துவோம்) என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும் இயேசுவே சிலுவைக்கருகில் என்னை வைத்துக்கொள்ளும் அங்கு விலையேறப் பெற்ற ஊற்று ஒன்றுள்ளது எல்லோருக்கும் சுகமளிக்கும் இலவசமான ஓடையொன்று (ஆம் ஆண்டவரே இலவசம்) கல்வாரி மலையிலிருந்து பாய்ந்தோடி வருகின்றது சிலுவையில், சிலுவையில் எந்தன் மகிமையாய எப்பொழுதும் இரும் என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும். 85(சகோ பிரான்ஹாம் பல்லவியை மெளனமாக இசைக்கிறார் - ஆசி). ஓ தேவனே! உங்களில் யாராகிலும் பீடத்தண்டை வந்து முழங்கால்படியிட்டு, ''கர்த்தாவே, நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவில்லை. நான் மறுபடியும் என்னை பிரதிஷ்டை செய்து கொள்ள விரும்புகிறேன் கர்த்தாவே, இன்றிரவே அதை செய்ய விரும்புகிறேன்“ என்று கூற விரும்பினால், உங்களை நாங்கள் வரவேற்கிறோம். உங்களுடன் ஜெபிக்க நாங்கள் இங்கிருப்போம். சிலுவையில், சிலுவையில் எந்தன் மகிமையாய் எப்பொழுதும் இரும் என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும் இயேசுவே சிலுவைக்கருகில் என்னை வைத்துக்கொள்ளும் அங்கு விலையேறப் பெற்ற ஊற்று ஒன்றுள்ளது எல்லோருக்கும் சுகமளிக்கும் இலவசமான ஓடையொன்று கல்வாரி மலையிலிருந்து பாய்ந்தோடி வருகின்றது. சிலுவையில், சிலுவையில் எந்தன் மகிமையாய் எப்பொழுதும் இரும் என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும். 86இப்பொழுது நாம் ஜெபிப்போம். ஒவ்வொருவரும் உங்களுக்கு சொந்தமான வழியில் ஜெபியுங்கள். நேரமாவதைக் குறித்து மறந்துவிடுங்கள். அவருடைய சமூகத்தில் நாம் தலை வணங்குவோம். இங்குள்ள ஸ்திரீ, ''இயேசுவே, உம்மை நான் நேசிக்கிறேன்'' என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நீ இரட்சிக்கப்பட்டபோது, அது உனக்கு எவ்வளவு இனிமையாயிருந்தது என்று ஞாபகமுள்ளதா? இன்றிரவும் அவர் அவ்வளவு இனிமையுள்ளவராயிருக்கிறார். நாம் ஜெபம் செய்வோம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்தமான வழியில் நாம் அனைவரும் நம்மை தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்து, நம்மை அர்ப்பணிப்போம். 87அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). ''என் ஆறுதல் அனைத்தின் ஓடையாக, என் ஜீவனுக்கு மேலாக நீர் இருக்கிறீர். பூலோகத்திலே உம்மைத் தவிர எனக்கு வேறு யாருண்டு? பரலோகத்திலே உம்மையல்லாமல் வேறு யாருண்டு?'' அன்புள்ள தேவனே எங்கள் ஒவ்வொருவர் மேலும் உமது இரக்கமும் கிருபையும் அனுப்பப்பட வேண்டுமென்று இப்பொழுது ஜெபிக்கிறோம். நாங்கள் பீடத்தைச் சுற்றிலும் இருக்கிறோம். அநேகர் இங்கு வரமுடியவில்லை. அவர்களை தங்கள் இருக்கைகளிலேயே சந்தியும். கர்த்தாவே, நாங்கள் உமக்கு எதை கொடுத்தாலும், அதை பெற்றுக் கொள்ள நீர் சித்தங் கொண்டவராயிருக்கிறீர். எங்கள் நேரத்தை உமக்கு நாங்கள் கொடுத்தால், அதை ஏற்றுக் கொள்வீர். தாலந்தைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர். ஆனால் தேவனாகிய கர்த்தாவே, இன்றிரவு அதை நாங்கள் கடந்து சென்று, எங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். நான் என்னவாக இருக்கிறேனோ அது அனைத்தையும், நான் என்னவாக இருப்பேன் என்று எதிர்பார்க்கிறேனோ, கர்த்தாவே அவையெல்லாம் உம்முடையவைகள். கர்த்தாவே, எங்கள் ஜெபங்களை உம் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியின் ஆழத்தை எங்களுக்களித்து, எங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படும்படி செய்யும். நாங்கள் முடிவின் அருகில் உள்ளோம் என்பதை காண்கிறோம். இன்னும் அதிகம் காலம் இருக்க முடியாது. எங்களுக்கு அருமையானவர்கள், வாலிபரும் வயோதிபரும், ஒவ்வொரு நாளும் மரித்துக் கொண்டிருப்பதை நாங்கள் காணும்போது, விரைவில் மரணம் எங்கள் கதவையும் தட்ட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இங்கு முழங்கால்படியிட்டு அல்லது நின்று கொண்டிருக்கும் போது, தேவனாகிய கர்த்தாவே, எங்களை ஏற்றுக் கொள்வீராக. கர்த்தாவே, என்னை ஏற்றுக்கொள்ளும். நான் ஒன்றுமற்றவன். நான் என்னவாயிருந்தாலும், என்னை உமக்கென்று நீர் உபயோக்கிக்கக் கூடுமானால், என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். 88அன்புள்ள தேவனே, நான் அரிசோனா மலையின் மேல் நின்று கொண்டு இவர்களுக்காக அழுதேன். இந்த அருமையான ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன், ஆண்டவரே, அவர்கள் எங்களுடன் இந்த பீடத்தண்டை முழங்கால்படியிட்டு ஜெபித்து, நாங்கள் எங்கள் ஜீவியத்தை பிரதிஷ்டை செய்கிறோம். பிதாவே, நாங்கள் எங்கள் ஜீவனைக் காட்டிலும் உம்மை அதிகமாக நேசிக்கிறோம். எங்கள் குடும்பத்தைக் காட்டிலும் உம்மை அதிகமாக நேசிக்கிறோம். எங்கள் மனைவி, பிள்ளைகள், தந்தை, தாய், சகோதரி, சகோதரன், கணவன் இவர்களைக் காட்டிலும் உம்மை அதிகமாக நேசிக்கிறோம். கர்த்தராகிய இயேசுவே, உம்மை நாங்கள் நேசிக்கிறோம். கர்த்தாவே, அதை எங்கள் இருதயங்களில் தத்ரூபமாக்கும். கர்த்தாவே, எங்கள் ஆத்துமாக்களில் இந்த வாரம் களிப்பின் எண்ணெயை ஊற்றுவீராக. எங்களை உமது வார்த்தையினால் குளிப்பாட்டி, கழுவி சத்தியத்தை சரியாக பகுத்து தாரும். கர்த்தாவே, மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த சத்தியங்களின் பேரில் இன்றிரவு குழப்பமுற்றுள்ளனர். ஓ, தேவனே, எங்களைக் கழுவுவதற்காக தேவனுடைய வீட்டிலுள்ள ஊற்றை நீர் திறந்து கொடும், எங்களை புது சிருஷ்டிகளாக்கி, இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்தும் சத்திய வசனத்தை நாங்கள் எடுத்துரைக்க எங்களுக்கு கிருபையும் பெலனையும் அருள்வீராக. கர்த்தாவே, அவர் எங்களுக்கு முன்னால் பிரத்தியட்சமாகட்டும். அவர் வந்து, எங்கள் வியாதியை சுகப்படுத்தி, எங்கள் பாவங்களை மன்னித்து, பசியுள்ள எங்கள் ஆத்துமாக்களை மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியினால் நிறைத்து, எங்கள் வாழ்க்கையில் சுவிசேஷம் வெளிப்பட அருள் புரியும். ஒவ்வொரு போதகரையும், ஒவ்வொரு பாடல் தலைவரையும், ஒவ்வொரு ஞாயிறு பள்ளி ஆசிரியரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, எங்கள் அனைவரையும் நீர் ஒருமித்து ஆசீர்வதியும். நாங்கள் உண்மையாக உம்மை நேசிக்கிறோம். இந்த பிரதிஷ்டையில் கர்த்தாவே, நாங்கள் உம்முடையவர்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமது சித்தத்தின்படி எங்களைப் பிரயோகியும். 89என் விசுவாசம் உம்மை நோக்கிப் பார்க்கிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும் என் பாவத்தையெல்லாம் போக்கும் ஓ, இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாகட்டும் அது உங்களுக்குப் பிரியமா? நாம் மறுபடியும் பாடுவோம். வாழ்க்கையின் இருளின் பாதையில் நான் நடந்து துயரம் என்னை சூழும்போது ஓ என் வழிகாட்டியாயிரும் இருள் பகலாக மாற கட்டளையிடும் துயரத்தின் கண்ணீரைத் துடையும் உம்மை விட்டு விலகிப் போகாதபடி என்னைக் காத்துக் கொள்ளும் அது உங்களுக்கு நல்லுணர்வைத் தருகின்றதா? எத்தனை பேருக்கு பழைய பாடல்களைப் பாடப் பிரியம்? எனக்கு மிகவும் பிரியம். உங்களுக்கும் அல்லவா? நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அழகான, அழகான சீயோன் நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு ஒ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அழகான, அழகான சீயோன் நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு தேவனை நேசிக்கும் நாம் ஒன்றுகூடி நம்முடைய மகிழ்ச்சியை தெரிவித்து இனிமையான ஒற்றுமையுடன் பாடலில் சேர்ந்து கொள்வோம் இனிமையான ஒற்றுமையுடன் பாடலில் சேர்ந்து கொள்வோம் இவ்விதமாய் சிங்காசனத்தை சூழ்ந்து கொள்வோம் இவ்விதமாய் சிங்காசனத்தை சூழ்ந்து கொள்வோம் இதை பாடும்போது நாம் எழுந்து நின்று ஒருவரோடொருவர் கை குலுக்குவோம். நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அழகான, அழகான சீயோன் நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கிறோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு இப்பொழுது நாம் தேவனிடம் நமது கரங்களையுயர்த்துவோம்: ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அழகான, அழகான சீயோன் நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம். ஓ, அழகான, அழகான சீயோன் நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம் அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு அது உங்களுக்கு அற்புதமான உணர்ச்சி அளிக்கிறதல்லவா? என்னே, என்னே! ஓ நாம் கைகளையுயர்த்தி நமது சொந்த வழியில் அவரை ஸ்தோத்தரிப்போம். 90கர்த்தராகிய இயேசுவே, நீர் சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிப் புஷ்பம், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம், பதினாயிரம் பேர்களில் சிறந்தவர், என் முழு வாழ்க்கையின் நதி, என் ஜீவனுக்கு மேலானவர், உம்மை நாங்கள் எவ்வளவாக நேசிக்கிறோம். (சகோ. பிரான்ஹாம் தொடர்ந்து ஸ்தோத்தரித்து தேவனை ஆராதிக்கிறார் - ஆசி). ......சிலுவையில் எந்தன் மகிமையாய் எப்பொழுதும் இரும் என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும் எனக்கு என்னமோ நாம் நமக்கு முன்னால் ஏதோ ஒன்று வைக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு எனக்கு தோன்றுகின்றது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள்... நான் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன் என்று நினைக்கிறேன். மிகுந்த மகிழ்ச்சி...? இருதயத்தில் துயரம் கொண்டுள்ள அநேகர்... பெரிய இரகசியங்கள் தெளிவாகும். விசனமாயுள்ள ஜனங்களுக்கு மகிழ்ச்சியுண்டாகும். சிலுவையில், சிலுவையில் எந்தன் மகிமையாய் எப்பொழுதும் இரும் என் மகிழ்ச்சியான ஆத்துமா நதிக்கப்பால் இளைப்பாறுதல் கண்டடையும் வரைக்கும். 91முன் காலத்து யோவானுக்கு பிரசங்கம் பண்ணக் கூடாதபடிக்கு அதிக வயதானபோது, அவன் உட்கார்ந்து கொண்டு, ''சிறு பிள்ளைகளே, ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்'' என்று தன் முழு பலத்துடன் கூக்குரலிடுவான் என்று நான் கூறக் கேட்டிருக்கிறேன். ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். உங்களிடையே ஒன்றும் வர அனுமதியாதேயுங்கள். பாருங்கள்? எல்லாவற்றையும் அப்புறப்படுத்துங்கள்... உங்களுக்குத் தெரியாது. அது என்னவாயிருப்பினும், அதை முகமுகமாய் சந்தியுங்கள். நாம் நினிவேக்குச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பாருங்கள்? உங்களை ஐக்கியத்திலிருந்து பிரிக்கும், தர்ஷீசுக்குச் செல்லும் அந்த பழைய கப்பலில் ஏறாதீர்கள். தேவனுடைய ஆசீர்வாதத்தின் நதியில் நாம் செல்வோம். அதை நாம் பெற்றுக் கொள்ளப் போகின்றோம் என்று நம்புகிறேன். என் பிதாவை நான் விசுவாசிக்கிறேன். 92சகோதரியே, இப்பொழுது நல்லுணர்வு தோன்றுகின்றதா? அது மிகவும் அருமையானது; அப்படித்தான் பிள்ளைகள் பிறப்பதை நான் காண விரும்புகிறேன். அது... அநேக ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் தேவனுடைய ராஜ்யத்தில் பிறந்ததை நான் எண்ணிப் பார்க்கின்றேன். ஜேபியில் எண்பது சென்டுகளை கொண்டு நாம் நின்று கொண்டிருந்த அந்த சமயத்தில், இப்படிப்பட்ட ஒரு சபை கட்டிடத்தைக் கட்டுவோமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஓ, ''நான் நட்டேன். அதற்கு இரவும் பகலும் நான் தண்ணீர் ஊற்றுவேன்'' என்று அவர் கூறினார். அவர் அதை செய்து முடித்தார். அவர் அதை செய்து முடித்தார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 93இப்பொழுது நாம் நமது தலைகளை வணங்கும்போது... நாளை இரவு, ஆராதனை இங்குள்ள பள்ளிக்கூட அரங்கில் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு எப்படி செய்வது என்று ஜனங்களுக்கு வழிகாட்ட, நாங்கள் யாரையாவது அங்கு நிறுத்துவோம். ஏனெனில் புதிதாக ஜனங்கள் வரக்கூடும். அவரை நீங்கள் நேசித்தால், ''ஆமென்'' என் கூறுங்கள் (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). ஓ! அவர் அற்புதமானவர் அல்லவா? நான் நதிக்கரையில் நின்று கொண்டு அந்த பழைய பாடலைப் பாடுகின்றேன். புயலடிக்கும் யோர்தான் நதிக்கரையில் நான் நின்று கொண்டு (யோசித்து பாருங்கள், அது முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்) அழகான, மகிழ்ச்சியான கானான் தேசத்தை விருப்பமான கண்களுடன் நோக்குகின்றேன் அங்கு தான் என் உடமைகள் உள்ளன. அன்று காலை நான் ஞானஸ்நானம் கொடுத்த அநேகர் இன்று அங்குள்ளனர். அவர்கள் அங்கு நின்று கொண்டு, விடி வெள்ளி நட்சத்திரம் வானத்திலிருந்து இறங்கி வந்து இப்படி வட்டமிடுவதைக் கண்டனர். அது, ''இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டதுபோல, உன்னுடைய செய்தி அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் திகழும்'' என்றது. அதை யாரால் நினைத்துப் பார்க்க முடிந்தது? ஆனால் தேவனுடைய வார்த்தை எல்லாமே உண்மையாயுள்ளது. தேவனுடைய வார்த்தை அனைத்துமே... மகத்தான ராஜாவின் பிரசன்னத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நாம் தலை வணங்கியிருக்கும்போது, நம்முடைய விலையேறப்பெற்ற போதகர் சகோ. நெவில் ஜெபம் செய்து நம்மை அனுப்பும்படி... அவரைக் கேட்டுக் கொள்ளப் போகின்றேன். சகோ. நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.